சிட்னியில் சுறா மீன் தாக்கி ஒருவர் பலி

சிட்னி: சிட்னி புற­ந­க­ரில் உள்ள கடற்­க­ரை­யில் சுறா மீன் தாக்கி ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். சிட்­னி­யி­லி­ருந்து ஆறு மணி நேரத் தொலை­வில் உள்ள காஃப்ஸ் துறை­மு­கத்­துக்கு அருகே எம­ரால்ட் கடற்­க­ரை­யில் நீர்ச்­ச­றுக்­கில் ஈடு­பட்ட இரு­பது வய­து­களில் இருந்த இளை­யரை சுறா மீன் தாக்­கி­யது.

நேற்று காலை 11.00 மணி­ய­ள­வில் உதவி கேட்டு அழைப்பு வந்­த­தைத் தொடர்ந்து அப்­ப­கு­திக்கு ஹெலி­காப்­டர் மருத்­து­வக் குழு உட்­பட அவ­சர மீட்­பா­ளர்­கள் விரைந்­த­னர்.

நீர்ச்­ச­றுக்­கில் ஈடு­பட்ட அந்த இளை­ய­ரைக் காப்­பாற்­றும் பகீ­ரத முயற்­சி­யில் அனை­வ­ரும் ஈடு­பட்­ட­னர். ஆனால் இளை­ய­ரின் கை துண்­டா­டப்­பட்­டி­ருந்­தது என்று நியூ சவுத் வேல்­ஸின் அவ­ச­ர­வா­கன ஊழி­யர் கூறி­னார்.

அந்த இளை­யரை உயிர்ப்­பிக்­கும் முயற்சி தோல்­வி­ய­டைந்­தது.

இது, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் நடந்­துள்ள இரண்­டா­வது சுறா தாக்­கு­தல் சம்­ப­வ­மா­கும் என்று ஆஸ்­தி­ரே­லியா டரோங்கா இயற்கை பாது­காப்பு அமைப்பு கூறி­யது.

கடந்த 2020ல் நடைெபற்ற 26 சுறா தாக்­கு­த­லில் எட்­டுப் பேர் மாண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!