ஆஸ்திரேலியாவில் 20 ஆண்டு இல்லாத விலையேற்றம்

சிட்னி: பல ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, ஆஸ்­தி­ரே­லியா தற்­போது கடு­மை­யான விலை­வாசி உயர்­வைச் சந்­தித்­து வருகிறது. அங்கு காபி, நூடல்ஸ், வேக­வைத்து பதப்­ப­டுத்­தப்­பட்ட பீன்ஸ் போன்­ற­வற்­றின் விலை­கள் அதி­க­ரித்து வரு­வ­தால், மத்­திய அர­சும் மத்­திய வங்­கி­யும் தலை­யிட வேண்­டும் என்ற கோரிக்­கை­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன.

உக்­ரேன்-ர‌ஷ்யா போர் கார­ண­மாக அதி­க­ரித்து வரும் எண்­ணெய் விலை, விநி­யோ­கச் சங்­கிலி பிரச்­சி­னை­கள் என நாடு முழு­வ­தும் விலை­வாசி ஏற்­றம் கண்­டுள்­ளது.

போதா­தற்கு மேற்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வில் பெய்த கன­மழை கார­ண­மாக உண­வுப் பொருள் விநி­யோ­கத்­தில் ஏற்­பட்­டுள்ள தடை­யும் விலை­யேற்­றத்­தைத் தவிர்க்க முடி­யா­த­தாக்­கி­விட்­டது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் தற்­போ­தைய பண­வீக்­கம் 3.5விழுக்­கா­டாக உள்­ளது. இது, 2009ல் ஏற்­பட்ட அனைத்­து­லக நிதி நெருக்­க­டிக்­குப் பிறகு ஆக அதி­க­மா­கும்.

ஆஸ்­தி­ரே­லிய மத்­திய வங்­கித் தலை­வர் டாக்­டர் பிலிப், பண­வீக்­கம் 4.5 விழுக்­கா­டாக உய­ரக்­கூடும் என்று கூறி­யுள்­ளார். பண­வீக்­கம் 6 விழுக்­காடு வரை­கூட செல்லக்­கூ­டும் என்று நிபு­ணர்­கள் சிலர் கூறு­கின்­ற­னர்.

இவ்­வாண்­டில் உண­வுப் பொருள்­க­ளின் விலை 6.8 விழுக்­காடு உயர்வு காணக்­கூ­டும் என கருத்­தாய்வு ஒன்று கூறு­கிறது.

வரும் மே மாதம் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் நாடா­ளு­மன்ற தேர்­தல் நடை­பெ­ற­வுள்ள நிலை­யில், இந்த விலை­யேற்­றம் மோரி­ச­னுக்கு பெரும் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்று அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!