சீனாவில் அச்சம்: புத்தாண்டுக் கூட்டம் தொற்றை அதிகரிக்கும்

பெய்­ஜிங்: சீனப் புத்­தாண்­டுக்­காக ஊர்திரும்பும் மாபெ­ரும் மக்கள் கூட்­டம் கொவிட்-19 கிரு­மிப் பர­வலை அதி­கப்­ப­டுத்­தக்­கூ­டும் என்று சீனா­வின் சுகா­தார நிபு­ணர்­கள் கவ­லைப்­ப­டு­கின்­ற­னர்.

வசந்த விழா என்று அழைக்­கப்­படும் சீனப் புத்­தாண்டு விடு­மு­றைக் காலம் வரும் சனிக்­கிழமை (ஜன­வரி 21) அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தொடங்­கு­கிறது.

சீனா­வின் பெரு­ந­க­ரங்­களில் உள்­ள­வர்­கள் புத்­தாண்டு கொண்­டாட தங்­க­ளது சொந்த ஊருக்­குத் திரும்­பத் தொடங்கி இருக்­கி­றார்­கள்.

நாட்டிலுள்ள ரயில் நிலை­யங்­

க­ளி­லும் விமான நிலை­யங்­க­ளி­லும் பய­ணப்­பெட்­டி­க­ளு­டன் பெருங்கூட்டம் காணப்படுகிறது. பல்லாயிரம் பயணிகளை நேற்று காண­மு­டிந்­தது.

கூட்­டம் கூட்­ட­மாக மக்­கள் நட­மா­டத் தொடங்கி இருப்­ப­தால் தற்­போ­தைய புதிய வகை கொவிட்-19 கிரு­மி­யின் பர­வல் மேலும் அதி­க­கரிக்கும் என சுகா­தார அமைப்­பு­கள் கருதுகின்றன.

அத­னால், பெரும்­பா­லான மருத்­து­வ­ம­னை­கள் மருந்து களையும் மாத்­தி­ரை­களையும் போது­மான அள­வுக்கு இருப்பு வைக்­கும் பணி­யில் தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­வ­தாக சீன அரசு ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

மருத்­து­வ­ம­னை­களில் மருந்து மாத்­திரை நில­வ­ரங்­க­ளைக் கணக்­கெ­டுத்து அவை ஏரா­ள­மான செய்­தி­களை வெளி­யிட்டு வரு­கின்­றன.

குறிப்­பாக, கிரா­மப்­புற மருத்­து­வ­ம­னை­களில் மருந்­து­க­ளை­யும் மருத்­துவ சாத­னங்­க­ளை­யும் பற்­றாக்­குறை இல்­லாத அள­வுக்கு வைத்­துக்­கொள்­வ­தில் கவ­னம் செலுத்­தப்­பட்டு வரு­கிறது.

மருத்­துவ வச­தி­கள் குறை­வாக இருக்­கும் இடங்­களில் கிரு­மிப்­ப­ர­வல் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்ற அச்­சம் நில­வு­வ­தால் அந்­நி­லை­யைத் தவிர்க்க ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்டு வரு­வ­தாக ஊடகங்­கள் குறிப்­பி­டு­கின்­றன.

ஷான்ஸி மாநி­லத்­தில் உள்ள ஒரு மருத்­து­வ­ம­னை­யைச் சேர்ந்த மருத்­து­வர் ஒரு­வர் ‘ரெட் ஸ்டார் நியூஸ்’ என்­னும் வட்­டார செய்தி நிறு­வ­னத்­தி­டம் பேசி­னார்.

அவர் கூறு­கை­யில், “கொவிட்-19 தொற்­றுப் பர­வ­லின் உச்­சத்­தைக் கடந்­து­விட்­டோம்.

“இருப்­பி­னும் புத்­தாண்­டுக் கொண்­டாட்­டம் நெருங்­கு­வ­தால் கிரா­மப்­பு­றத்­தி­ன­ரை­யும் மூத்­தோ­ரை­யும் தொற்று தாக்குவதன் மூலம் இரண்­டாம் அலை ஏற்

­ப­டுமோ என்று கவலைப்­ப­டு­கி­றோம்.

“கிரு­மிக்கு எதி­ரான மருந்­து­

க­ளை­யும் கொவிட்-19 தொடர்­பான இதர மருந்­து­க­ளை­யும் ஏரா­ள­மா­கக் கையி­ருப்பு வைத்­தி­ருந்­தால் மட்டுமே நாம் பாதிக்­கப்­படமாட்­டோம் என்ற நம்­பிக்கை பிறக்­கும்,” என அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!