மீண்டும் சீனப் பயணிகளை வரவேற்கும் தென்கொரியா

சோல்: சீனா­வி­லி­ருந்து வரு­வோருக்கு தென்­கொ­ரியா இன்று முதல் மீண்­டும் குறு­கிய காலத்­துக்­கான விசாவை வழங்­க­வுள்ளது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வலை முற்­றி­லும் அழிக்­கும் அணு­கு­முறையை சீனா அவ­ச­ர­மா­கக் கைவிட்­டது. சீனா­வின் எல்­லை­களும் திறந்­து­வி­டப்­பட்­டன.

அத­னால் அந்நாட்டில் கிரு­மிப் பர­வல் மோச­ம­டைந்­தது.

அதைத் தொடர்ந்து சில உலக நாடு­கள் சீனாவிலிருந்து வரும் பய­ணி­க­ளுக்கு எல்­லைக் கட்­டுப்­பா­டு­களை முடுக்­கி­விட்­டன. அவற்­றில் ஒன்­றான தென்­கொ­ரியா, சீனப் பய­ணி­க­ளுக்­குக் குறு­கிய கால விசா வழங்­கு­வதைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­போ­வ­தாக சென்ற மாதம் அறி­வித்­தது.

அதை­ய­டுத்து பதி­லடி நட­வடிக்­கை­யாக தென்­கொ­ரி­யப் பய­ணி­க­ளுக்கு விசா வழங்­கு­வதை சீனா நிறுத்­தி­யது.

கிருமிப் பரவல் நிலவரம் தற்­போது சீராக இருப்­ப­தை­யொட்டி சீனப் பயணி­க­ளுக்கு மீண்­டும் குறு­கிய காலத்துக்கான விசாவை வழங்­கப்­போ­வ­தாக தென்­கொரியா நேற்று அறி­வித்­தது. அதே­போல் தென்­கொ­ரி­யப் பயணி­க­ளுக்கு மீண்­டும் விசா வழங்­கு­வது குறித்து ஆலோ­சிக்­கப் போவ­தாக சீனா தெரி­வித்தது.

சீனப் பய­ணி­கள் சில­ருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது தென்­கொ­ரியா வந்­த­வு­டன் உறு­தி­யாகும். சென்ற வாரம் 1.4 விழுக்­காட்டு சீனப் பய­ணி­கள் மட்­டுமே கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­தாக சோல் குறிப்­பிட்­டது. கட்­டுப்­பா­டு­களை விதித்­த­போது இந்த விகி­தம் 20 விழுக்­கா­டாக இருந்­த­தென சோல் சுட்டி­யது.

இந்த விவ­கா­ரத்­தின் தொடர்­பில் சீனப் பய­ணி­க­ளுக்­கான கொவிட்-19 பரி­சோ­தனை விதி­மு­றை­கள் உள்­ளிட்­டவை தொடர்ந்து நடப்­பில் இருக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!