ஆழ்கடலில் 60 பேர் மூழ்கி மரணம்; பலர் மாயம்

ரோம்: இத்­தா­லியை நோக்கி அக­தி­களை ஏற்றிச் சென்ற படகு கட­லில் மூழ்­கி­யது. இதில் குறைந்­தது 59 அக­தி­கள் கட­லில் மூழ்கி மாண்­ட­னர்.

மாண்­டோ­ரில் 12 சிறு­வர்­களும் அடங்­கு­வர். கைக்­கு­ழந்தை ஒன்று உயி­ர் இழந்ததாக தெரி­விக்­கப்­பட்­டது.

பல சட­லங்­கள் கரை­யில் ஒதுங்­கி­ய­தாக இத்­தா­லிய அதி­கா­ரி­கள் கூறி­னர்.

பட­கில் இருந்த மேலும் பலரை இன்­னும் காண­வில்லை என்­றும் அவர்­க­ளைத் தேடும் பணி தொடர்­வ­தா­க­வும் அவர்­கள் கூறி­னர்.

அவர்­களும் இறந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று நம்­பப்­ப­டு­கிறது. எனவே மரண எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

80 பேர் உயி­ரு­டன் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கட­லில் விழுந்த சிலர் நீந்­தியே கரை­யைச் சேர்ந்­த­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

பல நாள்­க­ளுக்கு முன்பு துருக்­கி­யி­லி­ருந்து புறப்­பட்­டுச் சென்ற அப்­ப­ட­கில் மொத்­தம் எத்­தனை பேர் இருந்­தார்­கள் எனத் தெரி­ய­வில்லை.

ஆனால் பட­கில் 200க்கும் மேற்­பட்­டோர் இருந்­த­தாக ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் மீட்­புப் பணி­யா­ளர்­கள் தெரி­வித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத்­தா­லி­யின் தென்­க­டற்­ப­கு­தி­யில் இருந்­த­போது அப்­ப­டகு பாதி­யாக உடைந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அதை அடுத்து அதில் இருந்­த­வர்­கள் கட­லில் விழுந்­த­னர்.

பட­கில் இருந்த அக­தி­களில் பெரும்­பா­லா­னோர் ஆப்­கா­னிஸ்­தான், பாகிஸ்­தான், சோமா­லியா, ஈரான் ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் என அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இதற்­கி­டையே, பட­கில் இருந்­தோ­ரில் 20க்கும் மேற்­பட்­டோர் பாகிஸ்­தா­னி­யர்­கள் என்று பாகிஸ்­தான் பிர­த­மர் ஷெபாஸ் ஷரிஃப் கூறி­யுள்­ளார்.

இச்­சம்­ப­வம் தமக்கு மிகுந்த கவ­லையை அளிப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

பட­கில் இருந்த பாகிஸ்­தா­னி­யர்­க­ளின் நிலை குறித்து உட­ன­டி­யாக கண்­டு­பி­டித்­துத் தம்­மி­டம் தெரி­விக்­கு­மாறு பாகிஸ்­தா­னிய அர­ச­தந்­தி­ரி­க­ளுக்கு அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!