சாம்பியன்ஸ் லீக்: பயர்னைச் சந்திக்கும் மேன் யுனைடெட்

மொனாக்கோ: இங்கிலாந்து காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடக்கச் சுற்றில் ஜெர்மானிய ஜாம்பவானான பயர்ன் மியூனிக் குழுவைச் சந்திக்கும். பிரான்சின் பலம் வாய்ந்த குழுவான பாரிஸ் செயின்ட் ஜெமேன் இங்கிலாந்தின் நியூகாசல் குழுவுடன் பொருதும்.

மொனாக்கோவில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடக்கச் சுற்று போட்டிக்கான குலுக்கலில் எந்தெந்த பிரிவில் எந்தெந்த குழுக்கள் விளையாடும் என்பது தீர்மானிக்கப்பட்டது.

‘ஏ’ பிரிவில் பயர்ன், மேன்யூ குழுக்களைத் தவிர டென்மார்க்கின் எஃப்சி கோப்பன்ஹேகன், துருக்கியின் கலாட்டாசரே ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

‘பி’ பிரிவில் ஸ்பெயினின் செவியா, இங்கிலாந்தின் ஆர்சனல், நெதர்லாந்தின் பிஎஸ்வி அய்ன்ஹோவன், பிரான்சின் லென்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இத்தாலியின் நேப்பலி, ஸ்பெயினின் ரியால் மட்ரிட், போர்ச்சுகலின் பிராகா, ஜெர்மனியின் யூனியன் பெர்லின் ஆகியவை ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ளன.

‘டி’ பிரிவில் போர்ச்சுகலின் பென்ஃபிக்கா, இத்தாலியின் இன்டர் மிலான், ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க், ஸ்பெயினின் ரியால் சோசிடாட் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதும்.

‘இ’ பிரிவில் நெதர்லாந்தின் ஃபெயினூட், ஸ்பெயினின் ஆட்லட்டிக்கோ டி மட்ரிட், இத்தாலியின் லாசியோ, ஸ்காட்லாந்தின் செல்டிக் ஆகிய குழுக்கள் இடம்பெற்றுள்ளன.

‘எஃப்’ பிரிவில் பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெமேன், ஜெர்மனியின் பொரூசியா டோட்மண்ட், இத்தாலியின் ஏசி மிலான், இங்கிலாந்தின் நியூகாசல் ஆகியவை உள்ளன.

‘ஜி’ பிரிவில் இங்கிலாந்தின் வெற்றியாளர்களான மான்செஸ்டர் சிட்டி, ஜெர்மனியின் ஆர்பி லெப்சிக், செர்பியாவின் கிரிவினா ஸெவெஸ்டா, சுவிட்சர்லாந்தின் யங் பாய்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

‘எச்’ பிரிவில் ஸ்பெயினின் பார்சிலோனா, போர்ச்சுகலின் போர்ட்டோ, உக்ரேனின் ஷாத்தார் டொனெட்ஸ்க், பெல்ஜியத்தின் என்ட்வெர்ப் ஆகிய குழுக்கள் உள்ளன.

தொடக்கச் சுற்றின் முதல் ஆட்டம் செப்டம்பர் 19ஆம், 20ஆம் தேதிகளில் இடம்பெறும். தொடக்கச் சுற்று ஆட்டங்கள் டிசம்பர் 13ஆம் தேதியன்று நிறைவுபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் குழுக்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!