ஆசிய நாடுகளில் அரிசி விலையேற்றம்

ஆசியாவின் முக்கிய உணவுப் பொருளான அரிசிப் பற்றாக்குறையும் விலையேற்றமும் அந்நாடுகளின் முக்கிய பிரச்சினையாகத் தலையெடுத்துள்ளன.

அதிகரித்து வரும் வெப்பநிலை, பருவநிலை மாற்றங்கள் ஆகியவை, நெல்விளையும் முக்கிய ஆசிய நாடுகள் எங்கும் அச்சுறுத்தலாக உள்ளன. விளைச்சல் பாதிக்கப்பட்டதால் அரிசி விலை ஐந்தில் ஒரு பங்கு உயர்ந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியாவைத் தொடர்ந்து அரிசி ஏற்றுமதி செய்யும் மற்ற நாடுகளும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் நாட்டு மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி வருகின்றன.

அண்மையில் பாசுமதி தவிர்த்து மற்ற அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது.

இவ்வேளையில், முக்கிய அரிசி ஏற்றுமதி நாடுகளான தாய்லாந்தும் வியட்னாமும் அரிசி விலையை 20% அதிகரித்துள்ளன.

‘எல்நினோ’ விளைவுகளால் தாய்லாந்தில் அரிசி உற்பத்தி இந்த ஆண்டு 6% வரை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட ஆசியான் நாடுகளில் அரிசி விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.

மலேசியாவில் உள்ளூர் வெள்ளை அரிசி சிறப்புத் திட்டத்தின் மூலம் உள்ளூர் வெள்ளை அரிசி விநியோகத்தை 20% அதிகரிக்குமாறு நெல் ஆலையாளர்கள், அரிசி மொத்த விற்பனையாளர்களுக்கு அந்நாட்டு விவசாயம், உணவுப் பாதுகாப்புத் துறை சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சின் அறிக்கையின்படி, இந்த வட்டாரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட வெள்ளை அரிசி விலை, 2008 முதல் மலேசியாவில்தான் ஆகக் குறைவாக கிலோவுக்கு 2.70 ரிங்கிட் ஆக உள்ளது.

இந்நிலையில் அங்கு, ஒரு டன்னுக்கு 2,350 ரிங்கிட்டாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியின் விலை, ஒரு டன்னுக்கு 3,200 ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசியின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இறக்குமதியும் இருப்பும் குறைந்துவருவதால், இந்தோனீசியாவின் மிகப்பெரிய அரிசி சந்தையில் அரிசி இருப்பு, 2022ல் இருந்ததைவிட இப்போது மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. அக்டோபரில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் எல் நினோ வானிலை நிலவரத்தால் ஏற்படும் வெப்பம், வரும் ஆண்டுகளில் அரிசி விலையை மிக அதிகமாக்கும் என்ற கவலையும் தலைதூக்கி இருக்கிறது.

இந்தோனீசியாவின் 270 மில்லியன் மக்களின் பிரதான உணவாக இருக்கும் அரிசியின் விலை மாற்றங்கள், அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

நிலைமை சீரடையவில்லை என்றால், அரிசி விலை இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு கிலோ 15,000 ரூபாயை (S$1.33) எட்டக்கூடும் என்று இந்தோனீசியாவின் மிகப்பெரிய சந்தையான சிபினாங்கில் உள்ள அரிசி மொத்த விற்பனையாளர்களின் கூட்டுறவுத் தலைவர் திரு ஸுல்கிஃவ்லி ராஷ்யட் கூறினார்.

பயனீட்டாளரைப் பாதுகாக்கும் வகையில் பிலிப்பீன்ஸ் வெள்ளிக்கிழமையன்று அரிசிக்கான விலை உச்சவரம்பு விலையை அறிவித்துள்ளது.

அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஒரு கிலோவிற்கு 41 பிலிப்பீன்ஸ் பெசோக்கள் (S$0.98) அதிகபட்ச விலையாக நிர்ணயிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதே நேரத்தில் தீட்டப்பட்ட அரிசியின் விலை ஒரு கிலோவிற்கு 45 பெசோவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

உலகின் நெல் விளைச்சல், அரிசி கொள்முதலில் 90 விழுக்காடு ஆசியாவைச் சார்ந்துள்ளது. எனவே, அரிசிப் பற்றாக்குறை, விலையேற்றப் பிரச்சினைகளைச் சமாளிக்க புதிய தொழில்நுட்பப் பயன்பாடு போன்ற மாற்று வழிகளை ஆசிய நாடுகள் ஆராய்ந்து வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!