பாலஸ்தீன அப்பாவி மக்களைக் காப்பாற்ற இஸ்‌ரேலுக்கு அழுத்தம்

காஸா: காஸாவில் மருத்துவமனைகளுக்கு அருகில் இஸ்‌ரேலியப் படைகளுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான கடும் சண்டையின் விளைவாக மாண்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது.

அதில் காஸாவில் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவி பாலஸ்தீன மக்களைக் காப்பாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா உட்பட அனைத்துலக அளவில் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக ஐந்து வாரமாக நீடிக்கும் இஸ்‌ரேலிய குண்டுவீச்சு தாக்குதல்களால் இதுவரை 11,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகி விட்டனர்.

வெள்ளிக்கிழமையன்று இந்தியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், “ மிகப் பெரிய எண்ணிக்கையில் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு விட்டனர். கடந்த சில வாரங்களாக அவர்கள் பெரும் அவலத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்,” என்றார்.

மனிதாபிமான உதவிகள் காஸாவுக்குச் சென்று சேர்வதற்கு நாள்தோறும் நான்கு மணிநேர சண்டை நிறுத்தத்தை இஸ்‌ரேல் அறிவித்ததை வியாழக்கிழமை வரவேற்ற திரு பிளிங்கன், காஸா மக்களைக் காப்பாற்ற இதுபோன்ற நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“அதேவேளையில் காஸாவை பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் தளமாக ஹமாஸ் பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் இஸ்‌ரேலின் முயற்சிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்,” என்றும் அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை பிபிசி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பிரஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரான், காஸா நகர் மீது நடத்தப்படும் குண்டு வீச்சு தாக்குதலால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை இஸ்‌ரேல் நிறுத்த வேண்டும் என்றார்.

அதற்குப் பதிலளித்த இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, உலகத் தலைவர்கள் ஹமாஸ் இயக்கத்துக்குத் தங்களின் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டுமே தவிர இஸ்‌ரேலை அல்ல என்றார்.

“இன்று காஸாவின் ஹமாஸ் இயக்கத்தினர் நடத்தும் அட்டூழியங்கள் நாளை பாரிசில், நியூயார்க்கில் அல்லது உலகின் இதர பகுதிகளில் நிகழக்கூடும்,” என்றார் அவர்.

வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 240 பேரைப் பிணை பிடித்து வைத்திருக்கும் ஹமாஸ் போராளிகள், சண்டைநிறுத்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் படைப் பலத்தை அதிகப்படுத்திக்கொள்ளக்கூடும் என்று திரு நெட்டன்யாகு எச்சரித்தார்.

இதற்கிடையே, சவூதி அரேபியா, கூட்டு இஸ்லாமிய-அரபு கூடுதல் உச்சநிலைக் கூட்டத்துக்கு சனிக்கிழமையன்று ஏற்பாடு செய்திருந்தது என்று சவூதி வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

அந்தக் கூட்டத்தில் காஸா பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள ஆபத்தான சூழ்நிலைகளுக்கு எவ்வாறு உறுப்பு நாடுகள் தீர்வு காணலாம் என்றும் அவற்றுக்கு ஒற்றுமையுடனும் ஒருங்கிணைப்புடனும் எவ்வாறு பங்களிக்கலாம் என்றும் விவாதிக்கப்பட்டன என்றும் அமைச்சு சொல்லிற்று.

இதற்கிடையே சனிக்கிழமை அதிகாலை காஸா நகரில் நோயாளிகள் பெரும் அளவில் உள்ள மருத்துவமனைகளுக்கு மிக அருகில் வெடிப்புகளும் துப்பாக்கிச் சூடுகளும் இடம்பெற்றுள்ளன.

“இஸ்‌ரேல் இப்பபோது காஸா மருத்துவமனைகள் மீது போர் தொடுத்துள்ளது,” என்று அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குநர் திரு முகம்மது அபு செல்மேயா தெரிவித்தார்.

மேலும் காஸா நகரின் அல்-புர்க் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!