தென்சீனக் கடலில் இணைந்து சுற்றுக்காவலில் ஈடுபடும் பிலிப்பீன்ஸ், ஆஸ்திரேலியா

மணிலா: தென்சீனக் கடலில் பிலிப்பீன்சும் ஆஸ்திரேலியாவும் முதன்முறையாக இணைந்து நீர், ஆகாய சுற்றுக்காவலில் ஈடுபட்டுள்ளன.

சனிக்கிழமையன்று இவ்விரு நாடுகளும் சுற்றுக்காவல் நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கின. சில நாள்களுக்கு முன்புதான் பிலிப்பீன்ஸ், அமெரிக்காவுடன் இணைந்து இதேபோல சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டது.

அப்பகுதியில் சீனா வலுக்கட்டாயமாக ஆதிக்கம் செலுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதைக் கருத்தில்கொண்டு பசிபிக் வட்டார நாடுகள் பதில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆஸ்திரேலியாவும் பிலிப்பீன்சும் இணைந்து மேற்கொள்ளும் சுற்றுக்காவல் நடவடிக்கை மூன்று நாள்களுக்கு நீடிக்கும் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினேண்ட் மார்க்கோஸ் ஜூனியர் சமூக ஊடகத்தில் கூறினார். இதன் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே இவ்வாண்டு தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றதையடுத்து சுற்றுக்காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

தென்சீனக் கடல் வழியாக ஆண்டுதோறும் மூன்று ட்ரில்லியன் டாலருக்கும் (நான்கு ட்ரில்லியன் வெள்ளி) மேல் மதிப்புள்ள வர்த்தகப் பொருள்கள் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட அக்கடற்பகுதியின் மொத்தத்தையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. பிலிப்பீன்ஸ், வியட்னாம், இந்தோனீசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளும் தென்சீனக் கடலின் பல்வேறு பகுதிகளைச் சொந்தம் கொண்டாடுகின்றன.

தென்சீனக் கடற்பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடுவதற்கு சட்டரீதியான காரணம் கிடையாது என்று 2016ஆம் ஆண்டில் நிரந்தர நடுவர் மன்றம் கூறியிருந்தது.

தென்சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சிகளை பிலிப்பீன்ஸ் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தால் கடற்படை நடவடிக்கைகளின் தொடர்பில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்ற நிலை உருவெடுத்து வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!