‘சூப்பர்’ செவ்வாய்: பைடன், டிரம்ப்புக்கு மகத்தான வெற்றி

வா‌ஷிங்டன்: சூப்பர் செவ்வாய் (சூப்பர் டியூஸ்டே) என்றழைக்கப்படும் நாளன்று நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சித் தேர்தலில் பல இடங்களில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வெற்றிபெற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அவ்விருவரும் மீண்டும் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த திரு டிரம்ப் 12 மாநிலங்களில் வெற்றிபெற்றார். கலிஃபோர்னியா, டெக்சஸ் உள்ளிட்ட மாநிலங்கள் அவற்றில் அடங்கும்.

குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட தம்மை எதிர்த்து நின்ற நிக்கி ஹேலியை திரு டிரம்ப் எளிதில் பின்னுக்குத் தள்ளினார். முன்னாள் ஐக்கிய நாட்டுச் சபை தூதரான திருவாட்டி ஹேலி இனி அதிபர் தேர்தல் வேட்பாளராவது சிரமம்.

திருவாட்டி ஹேலி, அதிகாரபூர்வமாக அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியிலிருந்து விலகியதாகவும் சில தகவல்கள் தெரிவித்தன.

வெர்மோன்ட்டில் மட்டும்தான் திருவாட்டி ஹேலி வெற்றிபெற்றார் என்று எடிசன் ரிசர்ச் நிறுவனம் முன்னுரைத்தது.

திரு பைடன், மினசோட்டா உள்ளிட்ட 15 மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ளார். ஜனநாயகக் கட்சி பலமாக இருக்கும் மாநிலங்களில் அவர் எளிதில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் திரு பைடனின் அரசாங்கம் இஸ்ரேலுக்கு வலுவான ஆதரவு வழங்குவதையடுத்து அவருக்கு எதிர்ப்பு இருந்தது. அம்மாநிலத்தில் 20 விழுக்காட்டினர் அத்தகைய வாக்காளர்களாக இருந்தனர்.

இருப்பினும் திரு பைடன் மினசோட்டாவிலும் வென்றார்.

‘சூப்பர்’ செவ்வாய் தேர்தல் உட்கட்சித் தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக வரத் தொடங்கியதையடுத்து திரு டிரம்ப்பும் திரு பைடனும் தங்கள் கவனத்தை ஒருவர் மீதொருவர் திருப்பிக்கொண்டனர்.

திரு டிரம்ப், பல்வேறு குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்குகிறார்; எனினும், தற்போதைக்கு மூன்றாவது முறையாக அவர் அதிபர் தேர்தல் வேட்பாளராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள தமக்குச் சொந்தமான மா-ஏ-லாகோ பகுதியில் வெற்றி உரையாற்றிய திரு டிரம்ப், திரு பைடனின் குடிநுழைவுச் சட்டங்களைத் தாக்கிப் பேசினார். திரு பைடன், வரலாறு காணாத ஆக மோசமான அதிபர் என்றும் அவர் சாடினார்.

அதேவேளை, திரு டிரம்ப், அமெரிக்க ஜனநாயக முறைக்கு அச்சுறுத்தலாக விளங்குபவர் என்று திரு பைடனும் தாக்கிப் பேசினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!