அணுவாயுதங்களைக் கட்டுப்படுத்துவது மனிதர்களாக இருக்கட்டும், செயற்கை நுண்ணறிவு அல்ல: அமெரிக்கா

ஹாங்காங்: அணுவாயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பான முடிவுகள் யாவையும் மனிதர்களே எடுக்க வேண்டும் என்றும் ஒருபொழுதும் செயற்கை நுண்ணறிவிடம் அம்முடிவை விடவேண்டாம் என்றும் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் மூத்த அமெரிக்க அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

அணுவாயுதங்களின் மொத்த கட்டுப்பாடு மனிதர்களிடம் மட்டுமே இருக்கும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ‘தெளிவான, வலுவான கடப்பாடு’ தெரிவித்துள்ளதை இணையக் கூட்டம் ஒன்றில் ஆயுதக் கட்டுப்பாட்டு, தடுப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான பணியகத்தின் முதன்மை துணை உதவி செயலாளர் பால் டீன் சுட்டினார்.

“இதேபோன்றதோர் அறிக்கையை சீனாவிடமிருந்தும் ரஷ்ய கூட்டமைப்பிடமிருந்தும் நாங்கள் வரவேற்கிறோம்,” என்றார் அவர்.

“இது, பொறுப்பான நடத்தைக்குரிய முக்கியமான ஒரு விதிமுறை என்று நாங்கள் கருதுகிறோம். ‘பி5’ சூழலில் அதிகம் வரவேற்கத்தக்க ஒன்றாகவும் இது இருக்கும்,” என்று ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தின் ஐந்து நிரந்தர உறுப்புநாடுகளைச் சுட்டிக் கூறினார்.

சீனாவுடன் அணுவாயுதக் கொள்கை, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி ஆகிய இரண்டின் தொடர்பில் தனித்தனி விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் முயன்றுவருவதற்கு இடையே டீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!