உலகின் சாதனை அளவான வெப்பநிலை ஏப்ரல் இறுதிவரை தொடரும்

பிரஸ்ஸல்ஸ்: உலகம் அண்மையில் அதன் ஆக வெப்பமான ஏப்ரல் மாதத்தை அனுபவித்துள்ளது.

தொடர்ந்து நீடிக்கும் 11 மாத வெப்பக் காலத்தில் ஒவ்வொரு மாதத்திலும் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெப்பநிலை பதிவானதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பருவநிலை மாற்றக் கண்காணிப்புச் சேவை கூறியது.

சென்ற ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும், முந்தைய ஆண்டுகளில் உள்ள அதே மாதங்களைக் காட்டிலும், இந்தக் கிரகத்தின் ஆக வெப்பமான மாதங்களாகப் பதிவாகியுள்ளதாக ‘கோப்பர்னிக்கஸ் பருவநிலை மாற்றச் சேவை’ கூறியது.

ஏப்ரல் உட்பட, 12 மாதக் காலத்திற்கு உலகின் சராசரி வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆக அதிகமாகப் பதிவானது.

“பருவநிலை முறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கக்கூடுமா என்ற கேள்வியைப் பல விஞ்ஞானிகள் கேட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்,” என்று மூத்த பருவநிலை விஞ்ஞானி ஜூலியன் நிக்கலஸ் கூறினார்.

எரியும் படிம எரிபொருள்களிலிருந்து எரிவாயு வெளியேற்றம் பருவநிலை மாற்றத்திற்கு முக்கியக் காரணம்.

அண்மை மாதங்களில், எல் நினோ வானிலையும் வெப்பநிலையை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!