‘முவே தாய்’ கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடம்

சிறுவயதில் பள்ளி சென்று வீடு திரும்பும்போதெல்லாம் சக மாணவர்கள் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக 28 வயது ஷாம் ராஜ் இளஞ்சேரன் கூறினார். அந்த வயதில் சிறிய உருவம் கொண்டவராக அவர் இருந்தார். வீட்டிலும் குறும்புக்காரன் என்று பெயர் எடுத்த ஷாம், தன்னை ஒருமுறை உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அடித்த கொடுமையான சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார்.

இவ்வாறு தன் வாழ்க்கையில் பல வதைச்சம்பவங்களுக்கு ஆளானபோது தொடக்கத்தில் ஷாம் எதுவும் பேசாமல் இருந்தார்.

தம்பி, ஒற்றைப் பெற்றோரான தாயார் இருவருடனும் ஷாம் உதவி கோரியபோதெல்லாம் யாரும் உதவ முன்வரவில்லை என்பதைக் கலக்கத்தோடு கூறினார்.

பாதுகாப்புக்குத் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொண்டால் தன்னைத் துன்புறுத்த நினைப்பவர்கள் அடங்கிவிடுவார்கள் என்று முடிவெடுத்தார் ஷாம்.

‘முவே தாய்’ தற்காப்புக் கலை மீது அவருக்கு ஆர்வம் பிறந்தது.

கோபமும் பழிவாங்கும் எண்ணமும் அவருக்குள் குடிகொண்டதால் தன்னைத் தாக்க வருவோருக்குத் தான் பதிலடி கொடுக்கப் போவதாகத் தன் தாயாரிடமே கூறினார் ஷாம்.

அதன் பின்னர் அடிதடியில் ஈடுபட்ட நாள்களை அவர் நினைவுகூர்ந்தார். தன்னைப் பார்த்து அவர்கள் அஞ்சியபோது ஷாம் களிப்படைந்தார். 12 வயதில் முவே தாய் கற்கத் தொடங்கிய ஷாம் படிப்பில் நாட்டத்தை இழந்தார்.

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதுமின்றி, கொள்ளை, கடன் கொடுத்தல், வெட்டுக்குத்து என அவரது வாழ்க்கை மோசமான பாதையில் சென்றுகொண்டிருந்தது. 16 வயதில் கைப்பேசிகளைத் திருடிய காரணத்திற்காக முதலில் காவலர்களால் பிடிப்பட்ட ஷாம், தாக்குதல் தொடர்பான குற்றங்களுக்காக 22 வயது வரை மூன்று முறை சிறைக்குச் சென்று வந்துள்ளார். 2017ல் சிறையிலிருந்து விடுதலையானவுடன் புது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள திட்டமிட்ட ஷாம், மீண்டும் முவே தாய் கலைக்குத் திரும்பினார்.

கடந்த காலத்தைத் தூக்கி எறிந்துவிட்டு திருந்தி வாழ்வதற்கான எண்ணம் ஷாமுக்கு வந்தது. பயிற்றுவிப்பாளர் திரு பியா சோந்தயா டன்பெரியின் வழிகாட்டலில் ஷாம் முவே தாய் பயிற்றுவிப்பாளர் ஆவதற்கான பயிற்சியை மேற்கொண்டார். தன்னம்பிக்கையும் குறிக்கோளுடன் வாழும் வெறியும் ஷாமுக்கு முக்கியமாகின.

உள்ளூரிலும் தாய்லாந்திலும் இதுவரை 22 முவே தாய் போட்டிகளில் கலந்துகொண்ட ஷாம், தவறான பாதையில் செல்லாமல் இருந்திருந்தால் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று வருந்தினார்.

கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் வேலையின்றி தவித்த ஷாம், மெய்நிகராக முவே தாய் வகுப்புகளை நடத்திப் பிழைத்து வந்தார். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு அவரின் மாணவர்கள் தொடர்ந்து நேரடி வகுப்புகள்வழி அவரிடமிருந்து முவே தாய் கற்க விரும்பினர். அப்போது ஷாம் தனது முன்னாள் மாணவியுடன் கைகோத்து ஜாலான் புசாரில் ‘கிஃப்டட் ஃபைட் அகாடமி’ (Gifted Fight Academy) எனும் முவே தாய் பயிற்சிக் கழகத்தைத் திறந்தார்.

இன்று அனைத்து வயதிலும் 100க்கும் அதிகமான மாணவர்கள் பயிற்சிக் கழகத்தில் முவே தாய் கலையைக் கற்றுகொள்கின்றனர். தற்காப்புக் கலையைக் கற்பிப்பதுடன் நின்றுவிடாமல் ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் ஷாம் முயன்று வருகிறார்.

வழித் தவறிச் செல்லும் இளையர்கள், மனநலம் பாதிக்கப்படும்போது தவறான முடிவுகளை எடுக்கும் இளையர்கள் ஆகியோரை முவே தாய் கலை மூலம் நல்வழிப்படுத்துகிறார் இவர்.

சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தோடு இணைந்து சமூகத்திற்குத் திருப்பித் தருவதிலும் கவனம் செலுத்தும் ஷாம், எதிர்காலத்தில் மேலும் அதிக பயிற்சிக் கழகங்களைத் திறக்கும் முனைப்புடன் உள்ளார்.

தன்னுடைய தம்பி முன்னாள் தேசிய குத்துச்சண்டை வீரர் என்று குறிப்பிட்ட ஷாம், தம்பியைப் போல தீயனவற்றில் ஈடுபடாமல் இருந்திருந்தால் வாழ்க்கையில் இன்னும் அதிகம் தன்னால் சாதித்திருக்க முடியும் என்று சொன்னார். இளம் பருவத்தில் வீட்டில் அடங்காமல் இருந்ததை அடுத்து தற்போது தாயாருடனும் தம்பியுடனும் நேரம் செலவிடுவதில் கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறார் ஷாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!