நினைவு ஆண்டில் நினைத்துப் பார்க்க வேண்டியவை

அருண் மகிழ்நன், சிங்கப்பூர் 200ஆம் ஆண்டு நிறைவு ஆலோசனைக் குழு உறுப்பினர்

இந்த வாரம் சிங்கப்பூரர் அனைவருக்கும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
சரியாக 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வாரம்தான் சர் ஸ்டாம் ஃபர்ட் ராஃபிள்ஸ் சிங்கப்பூர் சாச னத்தில் கையெழுத்திட்டு, இந்தத் தீவைக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கான ஒரு வணிக மையமாக உருவாக்கி, நமது வரலாற்றில் ஒரு வியத்தகு அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்தியர்களைப் பொறுத்தவரை இந்த வாரம் இன்னும் முக்கியத்துவ மானது.
இந்தத் தீவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சீனர்களும் இந்தி யர்களும் கால் பதித்து, பல உள் நாட்டு இனங்களுடன் கலந்து வாழ்ந் ததற்கான ஆதாரம் இருந்தாலும், அவர்களின் வரலாற்றில் ஒரு தொடர்ச்சி இல்லாமல் இருந்தது.
எனினும் 1819ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதியிலிருந்து கடந்த 200 ஆண்டுகளாக இந்த நிலத்தில் இந்தியர்களின் வரலாறு தொய்வில் லாமல் தொடர்கிறது.
ராஃபிள்ஸ் தம்முடன் இந்தியர்களைக் கொண்டு வந்திருந்தாலும் பின்னர் இந்தியர்கள் தாமாகவே இங்கு வரத் தொடங்கினர்.
இந்தியாவில் சட்ட ஒழுங்கை மீறிய குற்றவாளிகள் இந்தியாவின் பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தால் சிங்கப் பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதில் விந்தை என்னவென்றால், சிங்கப்பூரில் சட்ட ஒழுங்கைக் கட்டிக் காக்க அவர்களுடன் சிப்பாய்கள் எனப் படும் காவலாளிகளும் அனுப்பிவைக்கப் பட்டனர்.
ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய ஒப்பந்தத் தொழிலாளிகளாக இந்தியர்கள் கொண்டுவரப்பட்டனர்.
மற்ற இந்தியர்கள் திரவியம் தேடியும் புதிய வாழ்க்கையை நாடியும் சொந்தமா
கவே இங்கு வந்துசேர்ந்தனர்.
பின்னர் காலனித்துவக் காலத்தின் போது மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், வேலையாட்கள், கூலித் தொழிலாளிகள் என இந்தியர்கள் பல் வேறு பணிகளில் ஈடுபட்டனர்.
எனினும் கிட்டத்தட்ட அனைவருமே சிங்கப்பூரைத் தற்காலிக வீடாகத்தான் பார்த்தனர். தாங்கள் பிறந்த மண்ணில் இறுதிக் காலத்தைக் கழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக இருந்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இங்கு அரசியலில் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டன.
அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் குடியேறியிருந்த சீனர்களும் இந்தியர் களும் தங்கள் வாழ்க்கையையே மாற்றக் கூடிய முடிவை, அதாவது சிங்கப்பூரைத் தங்கள் நிரந்தர இல்லமாக்கிக்கொள்ளும் முடிவை எடுத்தனர்.
தற்காலிகக் குடியேறிகளாக வந்தவர் கள் நிரந்தரக் குடிமக்களாக உருமாறி னர்.
நவீன சிங்கப்பூரின் வளர்ச்சி பற்றிய கதையில் இந்தியர்களின் பங்கு மிக முக்கியமானது.
இந்தியர்கள், பெரும்பாலும் தமிழர் கள், சிங்கப்பூர் மக்கள் தொகையில் சுமார் 9 விழுக்காட்டினராகவே இருந்து வந்திருக்கின்றனர். ஒப்புநோக்க, சீனர்கள் 75 விழுக்காடும் மலாய்க்காரர்கள் 15 விழுக்காடும் உள்ளனர்.
எண்ணிக்கையில் சிறுபான்மையின
ராக இருந்தாலும் சில துறைகளில் சில இந்தியர்கள் அசாதாரண சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். எனினும் மற்ற துறை களில் இந்தியர்களின் செயல்பாடு அவ் வளவு உகந்ததாக இல்லை என்பதே உண்மை. இதற்கு என்ன காரணம்?
நமது சமூகம் கடந்துவந்த பாதையை யும், நாம் எப்படிப் பெரும் முன்னேற்றத் தைத் தழுவினோம், அல்லது தடுமாறி னோம் என்பதையும் நினைத்துப் பார்க்க, இந்த நிறைவு ஆண்டு நல்ல தருணம்.
அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்ற பழமொழிக்கொப்ப ஒரு சமூகத் தின் ஒட்டுமொத்த செயல்பாட்டில் தலை மைத்துவத்தின் பங்கு மிக முக்கியமானது.
சிங்கப்பூரின் உருமாற்றத்தைப் பார்க் கும்போது அதற்கான அசைக்கமுடியாத ஆதாரங்கள் பல உள்ளன.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூ, முதல் துணைப் பிரதமர் டாக்டர் கோ கெங் சுவீ ஆகியோரின் தலைமைத்துவம் சிறந்த எடுத்துக்காட்டு.
அதுபோன்ற உன்னதத் தலைமைத் துவம் இல்லாத சூழ்நிலைகளில், செயல் பாடு மந்தமாகவே உள்ளது.
ஆனால் தலைமைத்துவம் மட்டும் போதுமா? உண்மையில் அசாதாரணத் தலைவர்களுக்குக் கீழ் செயல்படும் சாதா ரண மக்களும் மிக முக்கியம்.
"அற்புதப் பொருளியல்" என்று உலகப் புகழ்பெற்ற சிங்கப்பூரின் பொருளியல் வெற்றியை எடுத்துக்கொள்வோம்.
பொருளியல் வளர்ச்சிக்கு வித்திட்ட அமைச்சர் கோ கெங் சுவியின் அறிவுக் கூர்மையையும் தாண்டி, அன்றாடம் ஆயி ரக்கணக்கான வர்த்தகர்கள் மில்லியன் கணக்கில் எடுத்த சரியான முடிவுகளும் செயல்பாடுகளும் அந்த அற்புதத்திற்குக் காரணமாயின.
நமது வெற்றிக் கதைகளில் சாதா ரண மக்களின் பங்களிப்பு போதுமான அளவுக்குப் போற்றப்படுவதில்லை.
சமூகம், கல்வி போன்ற துறைகளில் தமிழர்களின் செயல்பாடு நிறைவாக இல்லாததற்கு சமூகத் தலைமைத்துவம் சிறப்பாக இல்லை என்பது ஒரு காரண மாகக் கூறப்படுகிறது.
தலைமைத்துவம் அதிமுக்கியம் என்பதை நாம் ஒப்புக்கொண்டாலும், அதனைப் பற்றி எப்போதுமே வலியுறுத்தி வந்திருந்தாலும், தனி மனிதர்களின் பங்களிப்பை நாம் தள்ளி வைக்கக்கூடாது.
களத்தில் பணியாற்றும் கடை மக்களும் மிகச் சிறப்பாகச் செயலாற்ற முடியும் என்பதையும், அவர்களுக்கு அசாதாரணமான திறமைகள் உண்டு என்பதையும் அனுபவம் உணர்த்தி யிருக்கிறது.
நாம் கடந்துவந்த பாதையின் வெற்றிகளை நினைத்துப் பூரிப்பதற்கு மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக, நமது கடந்த காலத்தைப் பற்றிச் சிந் திப்பதற்குமான தருணம்தான் இந்த 200ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சித் தொடர்கள்.
நம்மைச் சரியான பாதையில் இட்டுச் சென்றவை எவை, நாம் தடம் புரண்டு போகக் காரணமாக இருந் தவை எவை என்பதைப் பற்றிச் சிந்திப் பதற்கான தருணம்.
பெயர்பெற்ற தலைவர்களின் உன் னதச் சாதனைகளை மட்டுமல்ல, பெயர் தெரியாமல் பின்னணியில் ஆணி வேராக இருந்து உழைத்த சாதாரண மக்களைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வதே இந்த 200ஆம் ஆண்டு நிறைவுக்கு மேலும் அழகு சேர்க்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!