இந்த ஆண்டில் பணவீக்கம் நீடிப்பதற்கே வாய்ப்பு

சந்தைப் பொருளியலைப் பார்க்கையில் ஒரு பொருள், அல்லது சேவையின் விலை எப்போதுமே மாறிக்கொண்டேதான் இருக்கும். சிலவற்றின் விலை குறையும். சிலவற்றின் விலை அதிகரிக்கும்.

தனிப்பட்ட ஒரு பொருள் அல்லது சேவை என்று இல்லாமல், பரந்த அளவில் விலைகள் கூடினால் பணவீக்கம் ஏற்படும். நடைமுறையில் பணத்தின் மதிப்பு குறைந்து, பொருள், சேவையின் மதிப்பு அதிகமாக இருக்கும்.

மொத்தத்தில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும். இதைத்தான் இப்போது உலகம் அனுபவித்து வருகிறது. உலகம் முழுவதுமே பணவீக்கம் அதாவது விலைவாசி இப்போது அதிகமாக இருக்கிறது.

அதாவது அதே ஒரு பொருளை வாங்க முன்பு செலவிட்டதைவிட அதிக பணத்தை இப்போது செலவிட வேண்டிய நிலை இருக்கிறது.

அதேபோல் உங்களிடம் இப்போது இருக்கும் பணத்தைக் கொண்டு முன்பு வாங்கியதைப்போல் அதே பொருளை வாங்க இயலாது. பணவீக்கம் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. சிங்கப்பூரில் அண்மைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பணவீக்கம் அதிகமாக இருக்கிறது.

பண­வீக்­கம் பற்றி அர­சாங்­கம் கடந்த புதன்­கிழமை ஆகப் புதிய தக­வல்­கள், புள்­ளி­வி­வரங்­களை வெளி­யிட்­டது. பண­வீக்­கம் இந்த ஆண்டு முழு­வ­துமே தொடர்ந்து இருந்து வரும் என்­பது அதன் மூலம் தெரிய வரு­கிறது.

இப்­ப­டித்­தான் பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் பலரும் முன்­னு­ரைத்து இருக்­கி­றார்­கள். உலக அள­வில் விலை­கள் கொஞ்­சம் இறங்­குமு­க­மா­கத் திரும்ப வாய்ப்பு இருக்­கிறது என்­றா­லும்­கூட பண­வீக்­கம் இந்த ஆண்­டில் நீடிக்­கவே செய்­யும் என்­பதே கணிப்­பாக உள்ளது.

சிங்­கப்­பூ­ரில் சென்ற ஆண்­டு விலை­வாசி எப்படி இருந்­தது என்­ப­தைப் பார்க்­கும்­போது, எல்லா பொருள்­க­ளுக்­கு­மான பண­வீக்­கம் 6.1% அள­வுக்கு கூடியது.

அதா­வது $100 செல­விடுவதற்­குப் பதிலாக $106.1 செல­வி­ட­வேண்­டிய நிலை இருந்­தது.

இந்­தப் பண­வீக்க விகி­தம் 2021ஆம் ஆண்­டில் 2.3% ஆக நில­வி­யது. பண­வீக்­கத்­தில் இரண்டு வகை உண்டு. ஒன்று மூலா­தாரப் பண­வீக்­கம். அதா­வது குடி­யி­ருப்­புச் செலவு, போக்­கு­வ­ரத்­துச் செலவு ஆகி­ய­வற்றைச் சேர்க்­கா­மல் கணக்­கிடுவது மூலாதாரப் பண­வீக்­கம் எனப்­ப­டு­கிறது.

மற்­றொன்று ஒட்­டுமொத்தப் பண­வீக்­கம். இது அனைத்­தை­யும் உள்­ள­டக்கி கணக்­கி­டப்­ப­டு­வ­தாகும். சிங்­கப்­பூ­ரில் மூலா­தாரப் பண­வீக்­கம் சென்ற ஆண்­டில் 4.1% கூடி­யது. இந்த அதி­க­ரிப்பு 2021ல் 0.9%தான். 2022ல் பண­வீக்க அதி­கரிப்பு மிக அதி­கம். இந்த நில­வ­ரம் உட­ன­டி­யாக மாறி­வி­டும் என்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் குறை­வு­.

அனைத்­துப் பொருள்­க­ளுக்­கான பண­வீக்கம் சென்ற ஆண்டு நவம்­பரைவிட டிசம்பரில் குறைந்தது என்­றா­லும் ஒரு மாத நில­வ­ரத்தை மட்டும் வைத்­துக்கொண்டு கணக்­கி­டு­வது சரியா­ன­தாக இருக்­காது. மொத்­த­மாக பார்க்கையில் இந்த ஆண்­டில் பண­வீக்­கம் தொட­ரும் என்­று­தான் தெரி­கிறது.

சிங்­கப்­பூ­ரின் மத்­திய வங்­கி­யான சிங்­கப்பூர் நாணய ஆணை­ய­மும் வர்த்­தக, தொழில் அமைச்சும் இந்த ஆண்­டின் முதல் பாதி­யில் நில­வ­ரங்­கள் எப்படி இருக்­கும் என்­ப­தன் தொடர்­பான எதிர்­பார்ப்­பு­களை வெளி­யிட்­டுள்­ளன.

ஊழி­யர்­கள் கிடைப்­பது சிர­ம­மா­கவே இருக்­கும்; இதன் விளை­வாக சம்­ப­ளம் கூடும்; ஒரு பொருளை உற்­பத்தி செய்ய அல்­லது சேவையை வழங்க செலவு அதி­க­மாக இருக்­கும்; இத­னால் பய­னீட்­டுப் பொரு­ள்க­ளின் விலை உய­ரும்.

இது ஒரு­பு­றம் இருக்க, வாகன வாங்­கு­ரி­மைச் சான்­றி­தழ் வரம்பு தள­ரா­மல் இருக்­கும்; வாடகை வீட்­டுக்­குத் தேவை அதி­க­மா­கவே இருந்­து­வ­ரும்;

இவற்­றின் விளை­வாக, கார்­க­ளின் விலை, குடி­யிருப்­புச் செலவு கூடவே செய்­யும் என்று ஆணையமும் அமைச்­சும் கணித்­துள்­ளன.

அதே­வே­ளை­யில், இந்த ஆண்­டின் இரண்­டாம் பாதி­யில் நில­வ­ரங்­கள் கொஞ்­சம் மேம்­படும் என்று இவை எதிர்­பார்க்­கின்­றன, அதிக நம்­பிக்­கை­யு­டன் இருக்­கின்­றன. அதா­வது ஜூலை முதல் டிசம்­பர் வரைப்­பட்ட இரண்­டாம் பாதி­யில் உள்­ளூ­ரில் ஊழி­யர் பற்றாக்­குறை கொஞ்­சம் குறை­யும். உலக அள­வில் பண­வீக்­கம் கொஞ்சம் மெதுவ­டை­யும் என்று அவை நம்பு­கின்­றன.

இருந்­தா­லும்­கூட அனைத்­துப் பொருள்­க­ளின் பண­வீக்­கம் இந்த ஆண்டு முழு­மைக்­கும் 4.5% முதல் 5.5% வரை இருக்­கும் என்­பதே கணிப்­பாக இருக்­கிறது. அதே­போல் மூலா­தார பண­வீக்­கம் 2.5% முதல் 3.5% வரை இருக்­கும். பொது­வாக பார்க்­கை­யில் இந்த அளவு அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இவை ஒரு­பு­றம் இருக்க, பண­வீக்­கம் அதி­கரிக்­கும் என்­ப­தற்­கான ஆபத்­து­களும் இருப்­ப­தாக இந்த இரண்டு அமைப்­பு­களும் எச்­ச­ரித்­து இருக்­கின்­றன. உல­கில் எரி­சக்தி, உலோ­கம், உண­வுப்­பொருள்­களை ஆக அதி­க­மா­கப் பயன்­ப­டுத்­தும் நாடு­களில் சீனா­வும் ஒன்று. அந்த நாடு பொரு­ளி­யலை மீண்­டும் திறந்­து­வி­டும்­போது பொருள்­க­ளுக்­கான தேவை மிக அதி­க­மா­கி­வி­டும்.

சீனா­வின் பொரு­ளி­யல் இந்த ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் சூடு­பி­டிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அதே­வே­ளை­யில், உக்­ரே­னில் போர் தொடர்­வ­தால் இத்­த­கைய பொருள்­கள் கிடைப்­பதும் தொடர்ந்து சிர­ம­மா­கவே இருந்து வரக்­கூடிய வாய்ப்­பும் இருக்­கிறது.

அந்­தப் போர் கார­ண­மாக குறிப்­பாக உண­வுப்­பொ­ருள்­கள், உரம் கிடைப்­பது தடை­ப­ட­லாம்.

சீனா தன் எல்­லை­க­ளைத் திறந்­து­வி­டு­வ­தால் அந்த நாட்­டி­னர் வெளி­நா­டு­க­ளுக்கு அதி­க­மா­கப் பய­ணம் மேற்­கொள்­வார்­கள். இதன்­ கா­ர­ண­மாக சுற்­றுலா, விருந்­தோம்­பல் துறை­களில் செலவு கூடும் வாய்ப்­பும் இருக்­கிறது.

மொத்­தத்­தில் எல்­லா­வற்­றை­யும் கணக்­கிட்டுப் பார்த்­தால் இந்த ஆண்­டில் பண­வீக்­கம் தொட­ரவே செய்­யும் என்ற முடி­வுக்­குத்­தான் வர முடி­கிறது.

அப்­ப­டியே பண­வீக்­கம் குறைந்­தா­லும் அது கணிசமான அள­வுக்கு இருக்­காது என்­று­தான் கூற முடி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!