வெற்றிகரமான முறையில் மூப்படைய உதவும் 2023 செயல்திட்டம்

சிங்­கப்­பூர் மக்­கள் உல­கி­லேயே ஆக­ அ­திக ஆயுள் உள்­ள­வர்­கள். அவர்­கள் கூடு­மா­ன­வரை வேலை பார்க்கத் தோதாக சூழ்நி­லை­களை அமைத்­துக் கொடுத்து, உடல்நல­னு­டன், சுய­சார்­பு­டன் அவர் களை வாழவைத்து, தங்­கள் உற­வி­னர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­து­வ­ரும்­படி பார்த்­துக்கொள்­வது அர­சாங்­கத்­தின் இலக்­காக இருந்து வரு­கிறது.

கடை­சி­யில் கூட்­டிக்கழித்­துப் பார்க்­கை­யில் ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ரின் வாழ்க்­கை­யும் வெற்றி­க­ர­மான ஒன்­றாக இருக்­க­வேண்­டும் என்­ப­து­தான் நோக்­கம். நம் மக்­கள் அதிக காலம் வாழ்­ப­வர்­கள்.

அதே நேரத்­தில், மக்­கள்தொகை மூப்­படைந்து வரு­கிறது. இது முக்­கி­ய­மான ஒரு பிரச்­சினையாக, பெரும் சவா­லாக இருந்து வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் கடந்த 2015ஆம் ஆண்­டில் எட்டு பேரில் ஒரு­வ­ருக்கு வயது 65ஆக அல்­லது அதற்­கும் அதி­க­மாக இருந்­தது. வரும் 2030ஆம் ஆண்­டில், குடி­மக்­களில் நால்­வ­ரில் ஒரு­வர் அந்த வயது அளவை எட்­டி­ய­வ­ராக இருப்­பார் என்று மதிப்­பி­டப்­ப­டு­கிறது.

2030ஆம் ஆண்­டில் ஏறக்­கு­றைய 83,000 முதியோர் தனி­மை­யில் வாழ்­வார்­கள். அதே­போல, முதி­யோ­ரில் கிட்­டத்­தட்ட 100,000 பேருக்குக் குறைந்­த­பட்­சம் ஏதா­வது ஓர் உட­ற்குறை இருக்கும் என்­றும் கணக்­கி­டப்­பட்டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் எதிர்­கா­லத்தை நினைத்­துப் பாக்கும்­போது, அதைத் தீர்­மா­னிப்­ப­தில் மூப்­படை­யும் சமூகத்­தின் பங்கு ஏறு­மு­க­மாகி வரு­வது கண்­கூ­டா­கத் தெரி­கிறது.

மக்­களில் கணி­ச­மான அள­வி­னர் முதி­யோராக இருப்­பார்­கள். இவர்­க­ளின் உடல்நலனை, மன­நலனைக் கட்­டிக்­காக்க வேண்­டும். இவர்­க­ளின் பொரு­ளி­யல், சமூ­கத் தேவை­களும் ஈடேற வேண்டும். இதை எல்­லாம் கருத்­தில்கொண்டு 2015ஆம் ஆண்­டில் ஒரு செயல்­திட்­டம் நடப்­புக்கு வந்­தது. ‘வெற்­றி­க­ர­மான முறை­யில் மூப்­ப­டை­வதற்­கான செயல்­திட்­டம்’ என்று அதற்­குப் பெயர்.

அந்­தத் திட்­டம் பல சாத­னை­களை நிகழ்த்தி இருக்­கிறது. முதி­யோ­ருக்கு ஏற்ற வகை­யில் திருத்தி அமைக்­கப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட உடல்நலச் செயல்­திட்­டம் ஒன்றை நல்ல முறை­யில் பயன்­ப­டுத்திக்கொண்டு முதி­யோர் 105,500 பேர் பலன் அடைந்து இருக்­கி­றார்­கள்.

ஐம்­பது வய­துக்­கும் அதிக வயது உள்ள வர்களுக்குத் தோதாக வேலை­களை மாற்றி அமைத்து, அத்­த­கைய மக்­க­ளுக்­குத் தொடர்ந்து வேலை கொடுக்க முயன்ற 2,500க்கும் மேற்பட்ட முத­லா­ளி­க­ளுக்கு இதற்­கா­கவே மானி­யம் கொடுக்­கப்­பட்­டது. இதன் மூலம் 24,000 பேருக்கும் மேற்பட்ட இத்தகைய ஊழி­யர்­கள் பலன் அடைந்து உள்ளனர்; சக்­கர நாற்­கா­லி­யைப் பயன்­ப­டுத்­தும் உடற்­குறை­யா­ளர்­கள், அர­சாங்­கப் பேருந்­து­கள் அனைத்­தி­லும் வச­தி­யா­கப் பய­ணம் செய்­ய­லாம்.

எம்­ஆர்டி ரயில் நிலையங்­கள், இல­கு­ரக ரயில்­நி­லை­யங்­கள் எங்­கும் அவர்­கள் தடை­யின்றி வச­தி­யாக நட­மா­ட­லாம்; பரா­ம­ரிப்­புச் சேவை­க­ளைப் பெறக்­கூ­டிய குறிப்­பிட்ட இடங்­களில் மேலும் பல­ருக்­கும் இட­வ­சதி உரு­வாக்­கப் பட்­டுள்­ளது; வீட்­டில் இருந்­த­ப­டியே பரா­ம­ரிக்­கப்­படு­வோ­ருக்­கான வாய்ப்பு வச­தி­கள் அதி­க­மாக்­கப்­பட்­டன.

தாதிமை இல்­லங்­களில் அதிக படுக்­கை­கள் உரு­வாக்­கப்­பட்டு அவற்றின்வழி முன்­னி­லும் அதி­க­மான முதி­யோர், பரா­ம­ரிப்பு உத­வி­க­ளைப் பெற்றுள்ளனர்; நினை­வாற்­றல் இழப்பு குறை­பாடு கார­ண­மாக பாதிக்­கப்­ப­டு­வோ­ருக்­கா­கவே அக்­கம்­பக்­கங்­களில் அவர்­க­ளுக்­குத் தோதாக 15 சமூக அமைப்­பு­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கின்­றன.

இருந்­தா­லும் 2030ஆம் ஆண்­டுக்­கான கணிப்பை வைத்­துப் பார்க்­கை­யில் இவை எல்லாம் போதாது, மேம்­ப­டுத்­தப்­பட்ட திட்­டம் நடப்­புக்கு வர­ வேண்­டும் என்பது கட்டாயமாகிவிட்டது.

இதன் கார­ண­மா­கவே இப்­போது ‘வெற்­றி­க­ர­மான முறை­யில் மூப்­ப­டை­வ­தற்­கான 2023 செயல்­திட்­டம்’ என்ற திட்­டம் நடப்­புக்கு வரு­கிறது.

முதி­யோரைக் கூடு­மானவரை அதிக காலம் வேலை பார்க்­கும்­படி செய்து, தங்­க­ளு­டைய உற்றார் உற­வி­னர்­க­ளு­டன் அவர்­கள் தொடர்­பில் இருக்­கு­மாறு பார்த்­துக்­கொள்­வ­தற்­கான முயற்­சி­களும் இந்­தப் புதிய திட்­டத்­தில் அடங்­கும்.

இதன் ஓர் அங்­க­மாக சுகா­தார மேம்­பாட்டு வாரி­ய­மும் மக்­கள் கழ­க­மும் சேர்ந்து ‘நன்­றாக வாழ்­வோம், நன்­றாக மூப்­ப­டை­வோம்’ என்ற ஒரு செயல்­திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றன.

அடுத்த ஐந்­தாண்டு காலத்­தில் 50 வய­துக்கு மேற்­பட்ட மக்­களில் அரை மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­ட­வர்­களை எட்டி அவர்­க­ளின் உடல்­ந­ல­னைக் கட்­டிக்­காக்க உத­வு­வது இந்­தத் திட்­டத்­தின் முக்கிய நோக்­க­மாக இருக்­கிறது.

உடல்­ந­ல­னோடு மக்­கள் மூப்­ப­டைவதைச் சாதிக்க வேண்­டும் என்று இந்­தத் திட்­டம் இலக்கு நிர்­ண­யித்து இருக்­கிறது.

இந்த 2023 செயல்­திட்­டத்­தின்­படி, துடிப்­புடன் மூப்­ப­டை­வ­தற்­கான நிலை­யங்­க­ளின் எண்ணிக்கை 2025வது ஆண்டு வாக்­கில் 220ஆக உய­ரும்; போக்­கு­வ­ரத்து, முதி­யோ­ருக்கு மிக­வும் வச­தி­யாக இருக்க வேண்­டும் என்­ப­தைக் கருத்­தில்­கொண்டு ஒரு முடிவு எடுக்­கப்­பட்டுள்ளது.

அதா­வது முதி­யோ­ரில் அதி­க­மா­ன­வர்­கள் நட­மா­டக்­கூ­டிய இடங்­க­ளுக்கு அருகே உள்ள சுமார் 100 நடை­யர் மேம்­பா­லங்­களில் வரும் 2025வது ஆண்டு வாக்­கில் மின்­தூக்­கி­களை அமைப்­பது அந்­தத் திட்­டம்.

சிங்­கப்­பூ­ரர்­க­ளைப் பொறுத்­த­வரை தங்­கள்­வாழ்வைப் பற்­றிய அவர்­க­ளு­டைய எண்­ணம் எப்­போ­துமே நம்­பக­மான ஒன்­றா­கவே இருந்து வரு­கிறது. வய­தாக வய­தாக அவர்­க­ளின் நோக்க உணர்­வும் அதி­க­ரித்தபடியே இருக்­கிறது.

இருந்­தா­லும்­கூட வயது 65ஐ தொட்­டு­விட்டால் அல்­லது அதற்­கும் அதி­க­மா­கி­விட்­டால் எதிர்­காலம் என்­ன­வா­குமோ, தங்­கள் வாழ்க்கை தங்கள் கட்டுப்­பாட்­டில்­தான் இருக்­குமோ என்ற ஐயப்­பாடு கிளம்பி நம்­பிக்கை குறை­யும் மனநிலையை அவர்­கள் எதிர்­நோக்­கு­கி­றார்­கள்.

தாங்­கள் தனி­யாக விடப்­பட்­டு­வி­ட­லாம் என்ற பய­மும் கூடு­கிறது.

இவற்றுக்கு எல்­லாம் நல்ல தீர்வு காணப்பட்டு, மக்கள் வெற்றிகரமான முறையில் மூப்படைய புதிய செயல்­திட்­டம் உதவும் என்று தாரா­ள­மாக நம்பலாம்.

நாட­ளா­விய இந்த முயற்­சிக்கு இளை­யர்­களின் ஆத­ர­வும் பங்­கும் மிக முக்­கி­யம் என்­பது சொல்லித் தெரிய வேண்டி­ய­ ஒன்றல்ல.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!