சாந்தி-ஆசியாவையே வெற்றி கண்ட சிங்கப்பூர் தங்கச் சிங்கம்

உலகிலேயே ஆசியாதான் ஆகப் பெரிய கண்டம்.அந்தக் கண்டத்தில் உள்ள ஆக சிறிய நாடுகளில் சிங்கப்பூர் ஒன்று.

இருந்தாலும்கூட அவ்வளவு பெரிய ஆசியா கண்டத்தையே வென்று தங்க சாதனை படைத்து இருக்கிறது சிங்கப்பூர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த சாந்தி பெரேரா, 27, சீனாவில் ஹாங்சூ நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தில் ஆசிய நாட்டு வீராங்கனைகளை எல்லாம் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்.

சிங்க நாட்டின் தங்க மங்கையாக ஜொலிக்கும் சாந்தி, நாட்டிற்கும் வீட்டிற்கும் சிங்கப்பூரின் விளையாட்டுத் துறைக்கும் சேர்த்து இருக்கும் சிறப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

சிங்கப்பூரின் தேசிய திடல் தடப் போட்டி தங்கக் கனவு சுமார் அரை நூற்றாண்டுக்குப் பிறகு சாந்தி மூலமாக இப்போது கைகூடி வந்திருக்கிறது.

இந்தியாவின் புதுடெல்லி நகரில் 1951ஆம் ஆண்டில் நடந்த விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் இங் லியாங் சியாங் தங்கம் வென்று இருந்தார்.

அதற்குப் பிறகு 1974ஆம் ஆண்டில் தெஹ்ரானில் நடந்த போட்டியில், சீ சுவீ லீ 400 மீட்டர் பந்தயத்தில் தங்கம் வென்று பெருமை சேர்த்தார்.

அதற்குப் பிறகு இப்போது தங்கப் பதக்கத்துடன் சிங்கப்பூர் திரும்பி இருக்கிறார் சாந்தி.

சாந்தி, சிங்கப்பூர் விளையாட்டு வரலாற்றுச் சாதனை ஏடுகளில் இடம்பெற்றுவிட்டார்.

ரியோ டி ஜெனிரோவில் 2016ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் உலகையே வென்ற ஜோசப் ஸ்கூலிங், 2021ல் முதன் முதலாக உலக பேட்மிண்டன் வீரராக ஜொலித்த லோ கியன் இயூ ஆகியோர் உள்ளிட்ட சிங்கப்பூரின் விளையாட்டுத்துறை ஜாம்பவான்களில் மேலும் ஒருவராக, சிங்கப்பூரின் வெற்றி மகளாக சாந்தி ஜொலிக்கிறார்.

இதன் மூலம் விளையாட்டுத் துறையில் சிங்கப்பூருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையை அவர் பலப்படுத்தி இருக்கிறார்.

இத்தகைய நம்பிக்கையுடன் கூடிய ஒவ்வொருவரும் அளித்த ஆதரவு, சாந்தியின் வெற்றியில் பிரதிபலிக்கிறது.

அதோடு மட்டுமல்ல, விளையாட்டுத் துறையில் இளம் சிங்கப்பூரர்களுக்குப் புதிய ஊக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் சாந்தி.

மருத்துவம், பொருளியல், பொறியியல், சட்டம் போன்ற படிப்புகள்தான் வெற்றியின் அடையாளம் என்ற எண்ணம் வழிவழியாக இருந்து வந்துள்ள ஒன்று. இப்படிப்பட்ட நிலையில், அவற்றுக்கு அப்பால் விளையாட்டுத் துறையிலும் கவனம் செலுத்தி இளையர்களை அந்தத் துறையில் ஊக்குவிக்க சிங்கப்பூரின் விளையாட்டுத் துறை அமைப்புகள் மேற்கொண்டுள்ள, மேற்கொண்டு வருகின்ற முயற்சிகள் கொஞ்சநஞ்சமல்ல.

அந்த முயற்சிகளின் விளைவு சாந்தியின் வெற்றியில் எதிரொலிக்கிறது.

விளையாட்டுத்துறையில் சாதிப்பது என்பது, ஏட்டுக் கல்விச் சாதனைகளுக்கு ஈடானது என்ற எண்ணத்தை சாந்தியின் வெற்றி பலப்படுத்தி இருக்கிறது. அதற்கும் மேலாக, அவரின் வெற்றி வேறு ஒரு முக்கியமான அம்சத்தையும் மெய்ப்பித்துக் காட்டுவதாக இருக்கிறது.

அதாவது, அசாதாரணமான திறமையைப் புலப்படுத்துவேரை அடையாளம் கண்டு அவர்களுக்குக் குடும்பம், நண்பர்கள், விளையாட்டு உலகம், நாடு முழு ஆதரவை அளித்தால், அத்தகைய வீரர்களும் முழு நம்பிக்கை, உறுதி, கட்டொழுங்கு, இடைவிடா முயற்சிகளை மேற்கொண்டு வந்தால் எவ்வளவு காலம் ஆனாலும் சரி, எதிர்பார்த்த இமாலய வெற்றி நிச்சயம் ஒரு நாள் கைகூடிவரும் என்பது இப்போது உண்மையாகி இருக்கிறது.

தங்கம் வென்றது பற்றி கருத்து தெரிவித்த சாந்தி, தன் வெற்றிக்குப் பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள், விளையாட்டுத் துறை, நாடு அளித்த ஆதரவுதான் மிக முக்கியமானதாக இருந்தது என்று தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதர துறைகளைப் போன்றதல்ல விளையாட்டுத் துறை. விளையாட்டைப் பொறுத்த வரை தங்கம் என்றால் அதற்கு மவுசு தனிதான்.

வெற்றிபெறக்கூடிய நிலையில் இருக்கின்ற வீரர் ஒருவர், ஏதோ ஒரு காரணமாக கடைசியில் தங்கம்பெற இயலாமல் வெண்கலம், வெள்ளியைப் பெறுவதுண்டு. இப்படிப்பட்டவர்கள் எடுத்து வந்துள்ள முயற்சிகள், தங்கம் வென்றவரின் பெரும் முயற்சிகளுக்கு ஈடானதுதான்.

அல்லது அதைவிட அதிகமாகக்கூட இருக்கலாம். இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் கண் இமைக்கும் கடைசி நேரத்தில் அவர் தங்கம் பெற இயலாத நிலை ஏற்பட்டு இருக்கலாம்.

தங்கப் பதக்கம் கை நழுவிவிட்ட காரணத்திற்காக இப்படிப்பட்ட வீரர்களுக்குக் கிடைக்க வேண்டிய அளவுக்கு அங்கீகாரம் பொதுவாகக் கிடைப்பதில்லை. விளையாட்டைப் பொறுத்தவரை வெற்றி என்பதற்கான வரையறையில் இத்தகைய வீரர்களையும் உள்ளடக்கத்தான் வேண்டும்.

உன்னதத்தைச் சாதிக்க வேண்டும் என்று இத்தகைய வீரர்கள் விடாப்பிடியாக எடுத்து வந்துள்ள முயற்சிகளுக்கு அங்கீகாரம் அவசியம் தேவை. இத்தகைய அங்கீகாரம் கிடைத்தால் அது தங்கம் வென்று வாகை சூடும் சாதனையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக ஊக்கமூட்டும்.

அதிவேக குறுந்தொலைவு ஓட்ட சாதனை வீராங்கனையாக ஜொலிக்கும் சாந்தி, அடுத்ததாக ஒலிம்பிக் போட்டியில் குறி வைக்கிறார்.

அடுத்த ஆண்டு பாரிஸ் நகரில் நடக்க இருக்கும் அந்தப் போட்டிக்கு ஆயத்தமாகப் போவதாக அவர் அறிவித்து இருக்கிறார்.

கட்டொழுங்கு, நம்பிக்கை, உறுதி, விடா முயற்சிக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் சாந்தி, அனைத்துத் தரப்பினரின் முழு ஆதரவுடன் ஒத்துழைப்புடன் மேலும் சாதனைகளைப் படைத்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்கட்டும்.

ஆசியாவையே வென்ற அந்தத் தங்க மகள், உலகையும் வெல்லட்டும். அதன் மூலம் அனைத்துலக விளையாட்டுத் துறையில் சிங்கப்பூர் மேலும் மேலும் புகழ் முத்திரை பதிக்கட்டும்.

கடுகு சிறியது என்றாலும் காரம் போகாது, மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்று சிங்கப்பூர் அடையாளம் காணப்படட்டும். சிங்க நாட்டின் தங்க மகள் சாந்திக்கு வாழ்த்துக்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!