தமிழில் ரூ.400 கோடி வசூல் கண்ட படங்கள்

கொரோனா நெருக்கடி காலத்துக்குப் பிறகு இந்தியத் திரையுலகத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவை தமிழ்த் திரையுலகிலும் பிரதிபலிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக கோடம்பாக்கத்து கதாநாயகர்கள் இடையே, யார் நடித்த படம் அதிக வசூல் காண்கிறது என்பதில் பலத்த போட்டி நிலவுகிறது. முதல் நாள் வசூலில் தொடங்கி, ஒட்டுமொத்த வசூல் வரை நாள்தோறும் ஏதேனும் புள்ளி விவரங்கள் வெளியான வண்ணம் உள்ளன.

திரையரங்க, ஓடிடி தளங்களில் கிடைக்கும் வசூலைத் தவிர, சமூக ஊடகங்களில் ஒரு திரைப்படத்தின் பாடல், முன்னோட்டக் காட்சித் தொகுப்பு ஆகியவற்றை எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்பதிலும் போட்டி நிலவி வருகிறது.

தொடக்கத்தில் நூறு கோடி ரூபாய் வசூல் என்பதே இமாலயச் சாதனையாக இருந்த நிலை மாறி, இப்போது இருநூறு, முந்நூறு, நானூறு கோடி ரூபாய் என்று இலக்கு மாறிக்கொண்டே போகிறது.

தமிழ் சினிமா வரலாற்றில் 100 கோடி ரூபாய் வசூல் என்பதை முதன் முதலில் சாதித்தது ரஜினி நடித்த ‘சிவாஜி’ படம்தான். கடந்த 2007ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் உருவான இந்தப் படம் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டியதும் ரஜினி ரசிகர்கள் அந்த மைல்கல்லைக் கொண்டாடித் தீர்த்தனர்.

அதன் பிறகு கடந்த 16 ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகில் நாற்பது படங்கள் நூறு கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளன.

தமிழ் சினிமாவில் முதன் முதலில் 500 கோடி ரூபாய் வசூல் என்ற மாபெரும் இலக்கை தொட்டதும் ரஜினி படம்தான். அவரது நடிப்பில் வெளிவந்த ‘2.0’ படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்த ஒரே தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது என்கிறது தினத்தந்தி ஊடகச் செய்தி. அந்த வசூலை இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படமும் முறியடிக்கவில்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

கடந்த 2020ல் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் ரூ.500 கோடி வசூலைக் கடந்தது. கமல்ஹாசன் நடித்து வெளிவந்த ‘விக்ரம்’ படம் ரூ.400 கோடி வசூல் கண்டது.

இந்த ஆண்டில் ரஜினி நடித்து வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தின் வசூல் ரூ.550 கோடியைக் கடந்த நிலையில் விஜய்யின் ‘லியோ’ படமும் 400 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.

“நூறாண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் ‘2.0’, ‘பொன்னியின் செல்வன் 1’, ‘விக்ரம்’, ‘ஜெயிலர்’, ‘லியோ’ ஆகிய ஐந்து படங்கள் மட்டுமே ரூ.400 கோடி வசூலைக் கடந்துள்ளன. இதில் ‘லியோ’ படம் 500 கோடி ரூபாய் வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ‘2.0’ பட வசூலை விஜய் படம் முந்துமா என்பது சில நாள்களில் தெரியவரும்,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

இதற்கிடையே, தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு, கார்த்தி, விஷால் என இளம் நாயகர்களின் படங்களும் நூறு கோடி ரூபாய் வசூல் காண்கின்றன. இவர்களுடைய படங்கள் அடுத்த கட்டமாக ரூ.150 கோடி வசூலை எட்ட வேண்டும் என அவரவர் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்துக்கு ‘தலைவன்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!