‘லவ் டுடே’ பட நாயகன் பிரதீப் ரங்கநாதன் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இப்படத்தை முதலில் நடிகர் கமலஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ்’ தயாரிக்க இருந்தது. ஆனால் இப்போது ‘ஸெவன் கீரின் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் லலித் தயாரித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் மொத்த தயாரிப்புச் செலவு ரூ.60 கோடியாம். தொடக்கத்தில் 70 கோடி ரூபாய் செலவில் எடுப்பதாக இருந்தது. இந்நிலையில் கதையில் சில மாற்றங்களைச் செய்து செலவையும் குறைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.