31 கிலோ எடை குறைத்த பிருத்வி ராஜ்

‘தி கோட் லைப்’ படத்திற்காக மலையாள நடிகர் பிருத்வி ராஜ் 31 கிலோ எடை குறைந்திருக்கிறார்.

மலையாள பட உலகின் முன்னனி நடிகர் பிருத்வி ராஜ். இவர் ‘தி கோட் லைப்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அமலாபால், வினீத் ஸ்ரீவின்வாசன் மற்றும் ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்தன.

பிருத்வி சிறந்த நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் பயணித்து வருகிறார். இவர் ‘ஆகஸ்ட் சினிமா’ என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்தப் படத்திற்காக பிருத்வி ராஜ் 31 கிலோ எடை குறைத்து இருந்தார். கொவிட் காலத்தில் படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் அவரது உடல் எடை அதிகரித்தது.

அதன்பின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதும் உடல் எடையை குறைக்க மீண்டும் அதே செயல்முறையை மேற்கொண்டார். படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன.

இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளன. வருகிற 28ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வெளியிடப்படுகிறது.

அண்மையில் வெளியான மலையாளப் படங்கள் தமிழ், தெலுங்கு ரசிகர்களை மிகவும் கவர்ந்து உள்ளன. அதனால் தன்னுடைய படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறார் பிருத்வி ராஜ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!