கனவு மெய்ப்பட வேண்டும்; அதற்குச் சிறு சிறு முயற்சிகள் வேண்டும்

 2021ஆம் ஆண்டில் ‘சிட் ஸ்டில் லுக் ப்ரீட்டீ’ என்ற பெயரில் சொந்த வளையொலியை ‘ஸ்பாட்டிஃபாய்’ தளத்தில் தொடங்கினர். படம்: பிரியங்கா தமிழரசன் தேவர் 

‘ரேடியோ ஹீட்வேவ்’ என்ற பள்ளி வானொலித் தளத்தில் படைப்பாளராகும் வாய்ப்பு 2019ஆம் ஆண்டில் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தகவல் தொடர்பியல் படிப்பை மேற்கொண்டிருந்த 24 வயது பிரியங்கா தமிழரசன், 23 வயது சண்முகபிரியா இந்திரஜித் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது.

அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தளத்தில் தமிழில் படைக்க விரும்பினர். இருவரும் இவ்விருப்பத்தை நிறைவேற்றத் தங்களுடைய ஆசிரியரை நாடி அனுமதி பெற்று, ‘இளமை எக்ஸ்பிரெஸ்ஸோ’ என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளைப் படைக்கத் தொடங்கினர்.

எதிர்பாராத விதமாக இந்நிகழ்ச்சிக்கு ரசிகர் கூட்டம் பெருகத் தொடங்கியதால், இரண்டு மணிநேர நிகழ்ச்சி, மூன்று மணி நேரமானது. வசந்தம் தொலைக்காட்சிக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், சிறப்புப் பேச்சாளர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த வெற்றி, அவர்கள் பலதுறைத் தொழிற்கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு தங்களுடைய ஊடகத் துறை செயல்திறனை மேலும் மேம்படுத்த ஊக்குவித்தது. அதனால், அவர்கள் தொலைக்காட்சித் தயாரிப்புகளில் கலந்துகொண்டனர். ஆனால், காலப்போக்கில் மனநிறைவு ஏற்படாததால், அவ்வேலையை விட்டனர்.

பிறகு, வேலை செய்து சேமித்த சிறிதளவு பணத்தைக் கொண்டு 2021ஆம் ஆண்டில் ‘சிட் ஸ்டில் லுக் ப்ரீட்டீ’ என்ற பெயரில் சொந்த வளையொலியை ‘ஸ்பாட்டிஃபாய்’ தளத்தில் தொடங்கினர். பின்னாளில் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமாக ‘சிட் ஸ்டில் லுக் ப்ரீட்டீ’ திகழ, இதுவே அவர்களுக்கு அடித்தளமாக அமைந்தது.

இந்த நீண்டநாள் கனவை நிறைவேற்ற, இவ்விரு இளம் பெண்களும் படிப்படியாக எடுக்கும் முயற்சிகள் பெருமைக்குரியவை. தங்களைப் போலவே மற்ற இளையர்களும் அவர்களுடைய கனவை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகள் ஊக்கம் தரும் என இவர்கள் நம்புகிறார்கள்.

உள்ளூரில் சிறு வணிக உரிமையாளர்களைச் சிறப்பிப்பது, மகப்பேற்றுக்குப் பிறகான மனச்சோர்வு, முதல்முறையாக நிதியைக் கையாளும்போது ஏற்படும் சிரமங்கள் போன்ற தலைப்புகள் வளையொலியின்போது கலந்துரையாடப்படுகின்றன.

இளையர்களின் வாழ்கைக்குத் தொடர்புடைய வகையில் அமைந்துள்ள இந்த உரையாடல்களின் வழி இளையர்கள் தங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள தைரியம் பெறுவர் என்ற நம்பிக்கையையும் இந்தப் பெண்கள் வைத்திருக்கிறார்கள்.

“இளம் வயதினரிடையே நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முதலில் எனக்குள்ளேயே நான் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். வேட்கையோடு செயல்பட்டு என் கனவை நனவாக்குவது மட்டுமே என் இலக்காகும்,” என சண்முகபிரியா இந்திரஜித் பகிர்ந்துகொண்டார்.

இன்று ‘சிட் ஸ்டில் லுக் ப்ரீட்டீ’ நிகழ்ச்சி நிறுவனரும் இயக்குநருமான பிரியங்கா தமிழரசன், தயாரிப்பாளர் சண்முகபிரியா இந்திரஜித் இருவரும் தங்களுடைய வளையொலியைப் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமாக்க இத்துறையில் பல அனுபவங்களையும் திறன் அறிவையும் தொடர்ந்து பெற்று தங்களுடைய கனவை மெதுமெதுவாக மெய்ப்பிக்கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!