டெல்லியில் 7 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆளும் பாஜகவுக்கு எதிராகப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளன. இதற்காக, 26 கட்சிகளின் தலைவர்கள் பாட்னா மற்றும் பெங்களூருவில் இரண்டு முறை கூடி ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டணிக்கு ‘இண்டியா’ எனப் பெயர் சூட்டி உள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் டெல்லி பிரிவு மூத்த தலைவர் அல்கா லம்பா கூறும்போது, “இந்தக் கூட்டத்தில் 40 நிர்வாகிகள் பங்கேற்றனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவது குறித்து நிர்வாகிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

“பின்னர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்று மூத்த தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்,” என்றார்.

பாஜக வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு வேட்பாளரை மட்டுமே நிறுத்த வேண்டும் என்பது இண்டியா கூட்டணியின் முக்கிய வியூகமாக உள்ளது. குறிப்பாக, எந்த ஒரு தொகுதியிலும் வலுவாக உள்ள கட்சி வேட்பாளரை நிறுத்த பிற கட்சியினர் ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, டெல்லியில் ஆம் ஆத்மி வலுவாக, ஆளும் கட்சியாக உள்ள நிலையில், அனைத்துத் தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி மூத்த தலைவரும் அமைச்சருமான சவுரப் ரத்வாஜ் கூறும்போது, “இந்த விவகாரத்தில் கட்சியின் மத்திய தலைமை முடிவு எடுக்கும். எங்கள் தேர்தல் விவகாரக் குழுவும் இண்டியா கூட்டணிக் கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன,” என்று தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!