தெலுங்கானாவின் 115 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பிஆர்எஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஹைதராபாத்: நாட்டின் 29வது மாநிலமாக உதயமான தெலுங்கானாவில் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 2014ஆம் ஆண்டில் நடைபெற்றது. இதில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்தக் கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர ராவ் முதல்வரானார்.

இதனைத் தொடர்ந்து 9 மாதங்களுக்கு முன்னரே ஆட்சியைக் கலைத்துவிட்டு 2ஆம் முறையாக கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை கைப்பற்றி, 2வது முறையாக சந்திரசேகர ராவ் முதல்வராக பதவியேற்றார்.

தற்போது டிஆர்எஸ் கட்சி தேசிய கட்சியாக அறிவிக்கப்பட்டு, பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தெலுங்கானா சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பிஆர்எஸ் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

முதல்வர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்து வருகிறார். காங்கிரஸ், பாஜக இல்லாத 3வது அணியை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். எம்ஐஎம் கட்சியுடன் நட்புறவு கொண்டிருப்பதால் , இவருக்கு தெலுங்கானாவில் முஸ்லிம்களின் ஆதரவு இருக்கிறது.

தீவிர ஆன்மிகவாதியான சந்திரசேகர ராவ் திங்கட்கிழமை பஞ்சமி என்பதால் கட்சி வேட்பாளர்களின் முதல் பட்டியலை ஹைதராபாத் தெலுங்கானா பவனில் வெளியிட்டார். மொத்தமுள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவர் அறிவித்தார். இந்தமுறை சந்திரசேகர ராவ், காமாரெட்டி மற்றும் கஜ்வால் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தற்போதைய அமைச்சர்கள், பெரும்பாலான எம்எல்ஏக்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 7 பேர் மட்டும் மாற்றப்பட்டு உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!