சோனியா காந்தி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளையும் விவாதிக்க வேண்டும்

புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரில் அதானி குழுமத்தின் மீதான புதிய குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட முககியமாக ஒன்பது பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட வேண்டும் என்று சோனியா காந்தி பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினை, மணிப்பூர் வன்முறை, சமூகப் பிரச்சினைகள், சாதிவாரிக் கணக்கெடுப்பு, இந்திய நிலப்பகுதிகளை கையகப்படுத்தும் சீனா, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு, வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரம் ஆகியவை குறித்தும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று சோனியா காந்தி அக்கடிதத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முக்கியமாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு விவாதிக்க வேண்டும். அக்கூட்டத் தொடரின் விவாதப் பொருள் குறித்த பட்டியல், நிகழ்ச்சி நிரல் ஆகிய எதுவும் கட்சிகளுக்கு அனுப்பப்படவில்லை என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!