தேர்தல் சோதனையில் 64 கிலோ தங்கம், 400 கிலோ வெள்ளி

ஹைதராபாத்: தெலுங்கானாவில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ள பாதுகாப்புப் படையினா் நடத்திய சோதனையில் 64 கிலோ தங்கம், ரூ.59 கோடி ரூபாய் ரொக்கப் பணம், 400 கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

தெலுங்கானா சட்டப்பேரவைத் தோ்தல் நவம்பா் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட அக்டோபா் 9ஆம் தேதிமுதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக வழங்க பொருள்களைக் கொண்டு செல்வோர் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்புப் படையினர், வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு வருகின்றனர்.

கண்காணிப்பு நடவடிக்கையில், அக்டோபா் 16ஆம் தேதி வரை பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் விவரம் அடங்கிய அறிக்கை ஒன்றை மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி வெளியிட்டு உள்ளார்.

அதில், “ரூ.58.96 கோடி பணம், 64.2 கிலோ தங்கம், 400 கிலோ வெள்ளி, 42.203 காரட் வைரம், ரூ.6.64 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.2.97 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள், ரூ.6.89 கோடி மதிப்பிலான பரிசுப்பொருள்கள் ஆகியவற்றை இதுவரை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

“ரொக்கம், தங்கம், வெள்ளி, பரிசுப் பொருள்கள், மதுபானங்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.109.11 கோடி ஆகும். காவல் துறை மற்றும் பிற விசாரணை அமைப்புகளும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்ட்ர சமிதி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியுள்ளது. காங்கிரஸ், பாஜக ஆகியவை பிரதான எதிா்க்கட்சிகளாக களத்தில் உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!