பஞ்சாப் எல்லையில் போதைப்பொருள்கள்; ஆளில்லா வானூர்திகள் சிக்கின

சண்டிகார்: பாகிஸ்தானில் ஏவப்பட்ட ஆளில்லா விமானம் (டிரோன்) ஒன்றை இந்தியாவின் பஞ்சாப் எல்லையில் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

அத்துடன், பாகிஸ்தானில் கடத்தி வரப்பட்ட ஐந்து கிலோ ஹெராயின் போதைப்பொருள்களும் ஒரு துப்பாக்கியும் அதிரடிச் சோதனையில் சிக்கியதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இது குறித்து பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்கள் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், நவ.26 அதிகாலையில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அமிர்தசரசில் உள்ள சக் அல்லா பக்‌ஷ் கிராமத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், ஒரு பாகிஸ்தான் டிரோன், பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ஐந்து கிலோ ஹெராயின் மற்றும் ஒரு பிஸ்டன் துப்பாக்கியுடன் 20 துப்பாக்கிக் குண்டுகளைக் கொண்ட 2 மேகசின்களும் கைப்பற்றப்பட்டதாக பஞ்சாப் எல்லைக் காவல் படையினர் தங்களது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளனர்.

மேலும் கடந்த 10 மாதத்தில் மட்டும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்த 69 பாகிஸ்தான் டிரோன்கள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் பெரும்பான்மை டிரோன்கள் போதைப் பொருள் கடத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!