தெலுங்கானாவில் பிரசாரம் ஓய்ந்தது: இறுதிக்கட்ட பிரசாரத்தில் குவிந்த தலைவர்கள்

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டப்பேரவைக்கான தோ்தல் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை முடிவடைந்த நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் தலைவர்களும் இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளைச் சேகரித்தனர்.

பிரசாரம் செய்ய ஹைதராபாத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலைகளின் இருமருங்கிலும் பாஜக தொண்டர்கள் மலர்கள் தூவ, அவர்களைப் பார்த்து கையை அசைத்தபடி பிரதமர் மோடி வாகனப் பேரணியில் சென்றார்.

அதையடுத்து, மகபூபாபாத் மற்றும் கரீம் நகரில் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் தெலுங்கானாவின் வளர்ச்சிக்குத் தடையாக விளங்குவதாக அவர் கூறினார்.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற காரணத்தால் பாஜக மீது தெலுங்கானா மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவருக்காக உண்மையிலேயே பாடுபடும் கட்சியாக பாஜக விளங்குவதாகவும் மோடி தெரிவித்தார்.

இதற்கிடையே, மூத்த பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் தெலுங்கானா தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் திங்கட்கிழமை கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஷ்வா ஷர்மா உட்பட பல தலைவர்கள் இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

சட்டசபைத் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் கடைசி மாநிலமாக தெலுங்கானா உள்ளது. இங்கு வியாழக்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஒன்றுபட்ட ஆந்திராவில் இருந்து தனி மாநிலமாக பிரிந்ததில் இருந்து இருமுறை ஆட்சியைப் பிடித்த பாரதிய ராஷ்டிர சமிதி, மூன்றாவது வெற்றிக்காகப் போராடி வருகிறது.

இதேபோல பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் தெலுங்கானாவில் வெற்றிபெற அயராது உழைத்து வருகின்றன. இதனால் மாநிலத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டு இருக்கிறது.

அனல் பறக்க நடைபெற்று வந்த பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. தேர்தல் களத்தில் 2,290 வேட்பாளர்கள் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!