அமெரிக்க தரத்தில் இந்திய சாலைகள்: அமைச்சர் உறுதி

புதுடெல்லி: இந்தியாவின் சாலைக் கட்டமைப்புகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவைப்போல மாறும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (டிசம்பர் 20) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த ஒன்பது ஆண்டுகளில் ரூ. 50 லட்சம் கோடிக்கு மேற்பட்ட சாலைக் குத்தகைகளுக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்காக நடப்பில் இருந்த கொள்கைகள் திருத்தப்பட்டுள்ளன,” என்றார்.

“சாலை அமைப்பு தொடர்பாக எந்த ஓர் ஒப்பந்ததாரரும் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு என்னை நேரில் சந்திக்கத் தேவையில்லை.

“நாங்கள் முடிவெடுப்பதில் வெளிப்படையாகவும் விரைவாகவும் இருக்கிறோம். குறித்த நேரத்திற்குள் மிகவும் தரமாக வேலையை முடிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம்.

“தரமான வேலைகளை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். அதனால்தான் ஏழு உலக சாதனைகளைச் செய்ய முடிந்துள்ளது. மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சின் மகத்தான சாதனை இது.

“அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் சாலைகள் அமெரிக்க சாலைகளின் தரத்திற்கு இணையாக இருக்கும் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.

“அந்த ஐந்தாண்டுகளில் பொதுப் போக்குவரத்து முழுவதுமாக மாற்றமடையும். குறைந்த அளவு மாசுபாட்டுடன் போக்குவரத்து மேம்பாடு காணும்.

“மின்சாரப் பேருந்துகளை அதிக நகரங்களில் அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

“இதுதவிர, புதிய எல்லைப்புறச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்க வசதியாக 30 சாலைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன,” என்றார் கட்காரி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!