மக்கள் தலையில் வரிச்சுமையை ஏற்ற திட்டம்: காங்கிரஸ் மீது மோடி சாடல்

சத்தீஸ்கர்: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

மேலும், பரம்பரை வரி வசூலிக்கவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் புதன்கிழமையுடன் (ஏப்ரல் 24) முடிவடைந்தது.

பிரசாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொதுமக்களின் சொத்துகளையும், தங்கத்தையும் கணக்கெடுத்து, அவற்றை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சமூகத்தினருக்கு பகிர்ந்து அளிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என்று பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக தேர்தல் களத்தில் மாறியிருக்கிறது.

எனினும், பிரதமர் மோடி சரமாரியாக காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

சத்தீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சி ‘பரம்பரை வரி’ விதிப்போம் என்று சொல்கிறது என்று கூறினார்.

முன்னோர்கள் வழியாக கிடைத்த சொத்துகளுக்குப் பரம்பரை வரியையும் நடுத்தர மக்கள் மீது அதிக வரியையும் விதிக்க காங்கிரஸ் விரும்புகிறது.

பெற்றோரிடமிருந்து பெற்ற பரம்பரைச் சொத்துக்கு வரி விதிக்கப் போகிறது. உங்கள் கடின உழைப்பால் நீங்கள் சேர்த்த சொத்து உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கப்படாது என்றார் அவர்.

நாட்டில் உள்ள ஏழை மக்களின் சொத்துகள், உடைமைகள் மீது காங்கிரஸ் கட்சி கண் வைத்துள்ளது. மக்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்து, பணத்தை பறிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தாழ்த்தப்பட்டவர் இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லீம்களுக்கு கொடுப்பதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் மதரீதியிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

காங்கிரசின் மோசமான நிர்வாகம் மற்றும் அலட்சியமே நாட்டின் அழிவுக்குக் காரணம். இன்று, பயங்கரவாதம் மற்றும் நக்சலிசத்திற்கு எதிராக பாஜக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், வன்முறை பரப்புபவர்களை காங்கிரஸ் ஆதரிப்பதுடன், அவர்களை துணிச்சலானவர்கள் என்று அழைக்கிறது. பயங்கரவாதிகள் கொல்லப்படுவதற்கு காங்கிரசின் மிகப்பெரிய தலைவர் கண்ணீர் விடுகிறார். இதுபோன்ற செயல்களால் நாட்டின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துள்ளது என்று அவர் கூறினார்.

​​காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக்கின் முத்திரை இருந்தது என்று அன்றே கூறியிருந்தேன். அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, ​​இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என்று பாபா சாகேப் அம்பேத்கர் தலைமையில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் இதை மாற்றப்பார்க்கிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

இரண்டாம் கட்டத்தில் கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்பட நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் 82 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!