பங்குச்சந்தை வர்த்தகத்தில் தவறாக வழிநடத்தியதாக நால்வர் மீது குற்றச்சாட்டு

பங்குச்சந்தை வர்த்தகத்தில் தவறாக வழிநடத்திய குற்றங்கள் தொடர்பில் ‘நியூ சில்க்ரூட்ஸ்’ குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி கோ ஜின் ஹியன் மீதும் ஆடவர்கள் மூவர் மீதும் புதன்கிழமை அரசு நீதிமன்றத்தில் மொத்தம் 132 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

சுகாதாரப் பராமரிப்பு, எரிசக்தி நிறுவனமான நியூ சில்க்ரூட்சின் முன்னாள் தலைமை நிறுவன அதிகாரி கெல்வின் ஊ சியோங் குவான், முன்னாள் நிதி இயக்குநர் வில்லியம் டியோ தியாம் சுவான், ஜிடிசி குழுமத்தின் இயக்குநர் ஹுவாங் யிவன் ஆகியோர் அந்த மூன்று ஆடவர்கள்.

முன்னாள் பிரதமர் கோ சோக் டோங்கின் மகனான கோ, 54, 2015 முதல் 2020 வரை நியூ சில்க்ரூட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தார்.

நியூ சில்க்ரூட்சின் பங்கு விலை குறித்து தவறாக வழிநடத்த சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக நிதிப் பத்திரங்கள் மற்றும் வருநிலை வணிகச் சட்டத்தின்கீழ் அந்த நான்கு ஆடவர்கள் மீது தலா 31 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

2018 பிப்ரவரி 26ஆம் தேதிக்கும் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், வர்த்தகம் இடம்பெற்ற 31 நாள்களில் நியூ சில்க்ரூட்சின் பங்கு விலையை உயர்த்தும் நோக்கில் அவர்கள் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிதிப் பத்திர விதிமுறைகளை மீறியதன் தொடர்பில், மேலும் எட்டுக் குற்றச்சாட்டுகளை கோ எதிர்நோக்குகிறார்.

2021 நவம்பர் 15ஆம் தேதியிலிருந்து நியூ சில்க்ரூட்சின் பங்கு வர்த்தகத்துக்குத் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நால்வரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நிதிப் பத்திரங்கள் மற்றும் வருநிலை வணிகச் சட்டத்தின் சட்டப் பிரிவு 197ன்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழாண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அதிகபட்சமாக $250,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தனிப்பட்ட விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்காக, நியூ சில்க்ரூட்ஸ் நிறுவனத்தில் கோ வகித்த பதவியிலிருந்து அவர் விலகியதாக 2020 அக்டோபரில் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!