நவம்பரில் வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் 0.4% உயர்வு

ஆண்டிறுதி பள்ளி விடுமுறை காலமாதலால், குறைந்த எண்ணிக்கையிலான வீடுகள் விற்பனையானபோதும், நவம்பரில் வீவக வீட்டு விலைகள் 0.4% அதிகரித்தன.

கடந்த செப்பம்பரில் வீட்டு விலைகள் சரிந்ததற்குப் பிறகு, தொடர்ந்து இரண்டாவது மாதமாக வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் ஏறுமுகமாக இருந்தன என்று சொத்துச் சந்தை முகவைகளான 99.co மற்றும் எஸ்ஆர்எக்ஸ் ஆகியவற்றின் தரவுகள் தெரிவித்தன.

நவம்பரில் கைமாறிய மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை 2.8% சரிந்து, 2,138 வீடுகளாயின. ஒப்புநோக்க, அக்டோபரில் அந்த விகிதம் 10.8% ஆக இருந்தது.

அக்டோபரிலும் டிசம்பரிலும் விற்பனைக்கு விடப்பட்ட 12,800 வீடுகளின் பரிவர்த்தனைகளே வீட்டு விற்பனை மெதுவடைவதற்குக் காரணம் என்று பகுப்பாய்வாளர்கள் கூறினர்.

எம்ஆர்டி நிலையத்துக்கு அருகிலும் முக்கியமான வசதிகளும் இருப்பது போன்ற கவர்ச்சியான அம்சங்களைக் கொண்ட தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) வீடுகள் வாங்குபவர்கள் பலரை ஈர்த்தன என்று ஆரஞ்ச்டீ அண்ட் டை சொத்து நிறுவனத்தின் ஆய்வு, பகுப்பாய்வுப் பிரிவின் மூத்த உதவித் தலைவர் கிறிஸ்டின் சன் தெரிவித்தார்.

“புதிய வீடுகளுக்கான காத்திருப்புக் காலமும் குறைந்துவிட்டதால், வீட்டை வாங்கியே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளவர்களுக்கு வீடு கிடைக்கும் வாய்ப்பும் அதிகமாகியது,” என்றும் திருவாட்டி சன் சொன்னார்.

பெரிய மறுவிற்பனை வீட்டுக்குப் பதிலாக, பெரிய பேட்டைகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கூட்டுரிமை வீடுகளையே பெரிய வீட்டுக்கு மாற விரும்புவோர் தேர்வு செய்கின்றனர் என்று திருவாட்டி சன் மேலும் கூறினார்.

மறுவிற்பனை வீடுகள், குறிப்பாக பெரிய வீடுகளின் விலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளன. இதுவே, பெரிய மறுவிற்பனை வீடுகளை வாங்குவதைக் காட்டிலும் புதிய கூட்டுரிமை வீடுகளை வாங்குவதிலேயே மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்றும் திருவாட்டி சன் விவரித்தார்.

வீடுகளை வாங்குவோருக்கும் விற்போருக்கும் இடையிலான பொருந்தாத விலை எதிர்பார்ப்புகள், வேலை நிலையற்றதன்மை குறித்த அக்கறைகள் ஆகியவையுமே குறைவான வீட்டு பரிவர்த்தனைகளுக்குக் காரணமாக இருக்காலம் என்று கூறுகிறார் இஆர்ஏ சிங்கப்பூர் சொத்து நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி யூஜின் லிம்.

நவம்பரில் தலா குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளி மதிப்பிலான 45 வீடுகள் கைமாறின. அவற்றுடன் சேர்த்து, 2023ல் இதுவரை குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளி மதிப்பிலான 422 வீடுகள் கைமாறியுள்ளன.

2022ல் இதுபோன்ற 369 வீடுகள் கைமாறிய சாதனையை இது முறியடித்துள்ளது.

முதிர்ச்சியடைந்த நகரமான புக்கிட் மேராவில் சாதனை அளவில் ஆக அதிகமான மில்லியன் வெள்ளி மதிப்பிலான ஒன்பது வீடுகள் விற்பனையாகின. காலாங்/வாம்போ வட்டாரத்தில் ஆறு வீடுகளும், அங் மோ கியா, குவீன்ஸ்டவுன், பீஷான், தோ பாயோ, புக்கிட் பாத்தோக், மத்திய வட்டாரம், சிராங்கூன், உட்லண்ட்ஸ், கேலாங், ஹவ்காங், பிடோக் ஆகியவற்றில் தலா ஒரு வீடும் விற்கப்பட்டன.

புக்கிப் மேராவில் உள்ள வியூ@ஹெண்டர்சன் அடுக்குமாடி குடியிருப்பின் 31வது மாடிக்கும் 33வது மாடிக்கும் இடைப்பட்ட ஓர் ஐந்தறை வீடு $1.46 மில்லியன் என்று ஆக அதிகமான விலைக்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!