மறுவிற்பனை வீவக வீடுகளின் இடைநிலை விலை நான்கு ஆண்டுகளாக ஏற்றம்

வீடமைப்பு வளர்ச்சி கழக மறுவிற்பனை வீடுகளின் இடைநிலை விலை கடந்த நான்கு ஆண்டுகளாக ஏற்றம் கண்டு வந்துள்ளன.

இந்த விலை ஏற்றம் இடைநிலை தனியார் மறுவிற்பனை, புதிய வீடுகளின் 2020, 2021ஆம் ஆண்டுகளின் இடைநிலை விலையையும் மிஞ்சுவதாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும், அந்த விலை ஏற்றம் 2022, 2023ஆம் ஆண்டுகளில், விலையேற்றத்தை எதிர்க்கும் போக்கும், அரசாங்கம் 2022ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிவித்த சொத்துச் சந்தை தணிப்பு நடவடிக்கைகள் காரணமாகவும் விலையேற்றம் மட்டுப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வீவக வீடுகளுக்கு கழகத்திடம் கடன் பெறும் தகுதி கடுமையாக்கப்பட்டது, தனியார் வீடுகளை விற்போர் 15 மாத காத்திருப்புக்கு பின்னரே கழக வீடுகளை சலுகைகளின்றி வாங்கலாம் போன்றவை சொத்துச் சந்தை தணிப்பு நடவடிக்கைகளில் அடங்கும்.

இருப்பினும், வீவக வீடுகளின் இடைநிலை விலை 2022ஆம் ஆண்டு 9.2 விழுக்காடு ஏற்றம் கண்டு ஒரு சதுர அடிக்கு 499 வெள்ளி என உயர்ந்தது. இதுவே, 2023ஆம் ஆண்டு மேலும் 6.2 விழுக்காடு உயர்ந்து சதுர அடிக்கு 530 வெள்ளி ஆனது.

இந்த விலை ஏற்றம் கடந்த 2014லிருந்து 2019ஆம் ஆண்டுவரை ஆறு ஆண்டு விலை வீழ்ச்சிக்குப் பின் நிகழ்ந்தது என்று கூறுகிறது பிராப்நெக்ஸ் சொத்துச் சந்தை ஆய்வு நிறுவனம்.

இதற்குக் காரணம் 2013ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட சொத்துச் சந்தை தணிப்பு நடவடிக்கைகள் என்று பிராப்நெக்ஸ் தெளிவுபடுத்தியது.

மறுவிற்பனை வீடுகளின் இடைநிலை விலை 2013ஆம் ஆண்டில் ஒரு சதுர அடியின் விலை 454 வெள்ளியாக இருந்தது. பின்னர் இது 2019ஆம் ஆண்டில் 388 வெள்ளியாக வீழ்ந்தது. அதற்கு அடுத்து 2020ஆம் ஆண்டில், தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளின் கட்டுமானம் தாமதமடைந்ததால், மறுவிற்பனை வீடுகள் அதிகமாக கைமாறி இடைநிலை விலை சதுர அடிக்கு 4.4 விழுக்காடு ஏற்றம் கண்டு 405 வெள்ளியானது என்றும் இந்த ஆய்வு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இது பின்னர் 2021ஆம் ஆண்டு 12.8% ஏற்றம் கண்டு சதுர அடிக்கு $457 ஆனதாக பிராப்நெக்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

ஒப்புநோக்க, கூட்டுரிமை வீடுகளின் இடைநிலை விலை 2020ஆம் ஆண்டு 1 விழுக்காடு மட்டுமே விலை எற்றம் கண்டதாகவும் 2021ஆம் ஆண்டு 7.5 விழுக்காடு விலை ஏற்றம் கண்டதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது.

மறுவிற்பனை வீடுகளின் விலை ஏற்றம் அதிக வீடுகள் விற்பனையின் காரணமாக நிகழ்ந்துள்ளது. இதன்படி, 2019ஆம் ஆண்டில் 23,714 வீடுகள் விற்பனையாயின. இதற்கடுத்த 2020ஆம் ஆண்டில் 24,748 வீடுகளும் 2021ஆம் ஆண்டில் 31,017 வீடுகளும் விற்பனையாயின என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!