‘ஸ்மார்ட்’ மின்சார கார் சிங்கப்பூரில் அறிமுகம்

சிங்கப்பூரில் ‘ஸ்மார்ட்’ கார்களை விற்பனை செய்ய சைக்கிள் அண்ட் கேரேஜ் நிறுவனம் உரிமை பெற்றுள்ளது.

சீன நிறுவனமான ஜீலியும் ஜெர்மானிய கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸும் இணைந்து உருவாக்கி உள்ள மின்சார காரின் பெயர்தான் ‘ஸ்மார்ட்’.

சீனாவின் மின்சார வாகனத் தயாரிப்பான ‘ஓரா’விற்கான விற்பனை உரிமையைப் பெற்ற ஓராண்டில் ‘ஸ்மார்ட்’ காருக்கான உரிமையையும் பெற்றுள்ளது சிங்கப்பூரில் தலைமை இடத்தைக் கொண்டு இயங்கும் சைக்கிள் அண்ட் கேரேஜ் (சி அண்ட் சி).

இவ்வாண்டின் முதலாம் பாதியில் சிறிய ‘ஸ்மார்ட் #1’ கார்களை விற்கத் தொடங்குவதாக சி அண்ட் சி வியாழக்கிழமை (ஜனவரி 4) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மின்சார வாகனத் தேவைக்கு ஈடுகொடுக்க சரியான நேரத்தில் ஸ்மார்ட் காருக்கான விற்பனை உரிமை கிடைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வில்ஃபிரிட் ஃபூ தெரிவித்துள்ளார்.

காரின் வடிவமைப்பு, இயங்கும் தன்மை போன்றவற்றின் நிபுணத்துவத்திலும் அனுபவத்திலும் ‘ஸ்மார்ட்’ காருக்கு தனித்திறன் உள்ளதால் சிங்கப்பூரில் அந்த கார் சிறந்ததொரு இடத்தைப் பிடிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!