புத்தாண்டு டோட்டோ குலுக்கல்: இருவருக்குத் தலா $1.96 மில்லியன் பரிசு

2024ஆம் ஆண்டின் தொடக்கமே சிலருக்கு அதிர்ஷ்டத்தை தேடித் தந்துள்ளது.

வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) நடைபெற்ற புத்தாண்டு டோட்டோ குலுக்கலுக்கான $5.89 மில்லியன் பரிசுத் தொகை மூன்றாகப் பிரித்து வழங்கப்பட்டது. மூன்றில் ஒரு பங்காக $1.96 மில்லியன் கிடைக்கும்.

வெற்றியாளர்களில் இருவர், ‘குவிக்பிக் ஆர்டினரி என்ட்ரி’ முறையில் $1 குலுக்கல் சீட்டை வாங்கியிருந்தனர்.

கடைசி வெற்றிச் சீட்டு ‘ஐடோட்டோ சிஸ்டம் 12’ மூலம் வந்தது. சிங்கப்பூர் பூல்ஸ் இணையத்தளத்தைப் பொறுத்தவரை, அந்த ஐடோட்டோவில் இடம்பெற்ற 26 குலுக்கல் சீட்டுகள் $1.96 மில்லியன் பரிசுத் தொகையைப் பகிர்ந்தன.

வெள்ளிக்கிழமை குலுக்கலில் அறிவிக்கப்பட்ட வெற்றி எண்கள் 7, 12, 17, 20, 31, 35. உபரி எண் 22.

இரண்டாம் நிலை (குரூப் 2) பரிசை 17 பேர் பகிர்ந்துகொண்டனர். அவர்களுக்குத் தலா $73,010 கிடைக்கும்.

பரிசுத் தொகையை வென்ற இரு ‘குவிக்பிக்’ குலுக்கல் சீட்டுகளில் ஒன்று, ‘ஃபாட் சாய் ஹெங் டிரேடிங்’கில் விற்கப்பட்டது.

மற்றொரு ‘குவிக்பிக்’ சீட்டு ‘இங் டியோ குவான் செல்ஃப் சர்வீஸ்’இல் விற்கப்பட்டது.

அடுத்த டோட்டோ குலுக்கல் திங்கட்கிழமை (ஜனவரி 8) நடைபெறும். அதற்கான பரிசுத் தொகை வழக்கம்போல ஏறக்குறைய $1 மில்லியன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!