இந்த ஆண்டு 19,600 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு: வீவக

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக), இந்த ஆண்டு (2024) மூன்று பிடிஓ திட்டங்களின்கீழ் 19,600 வீடுகளை விற்பனைக்கு விடவிருக்கிறது.

அவற்றில், மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காத்திருப்பு நேரம்கொண்ட 2,800 வீடுகளும் அடங்கும். பிடிஓ வீடுகள் பிப்ரவரி, ஜூன், அக்டோபர் மாதங்களில் விற்பனைக்கு வரும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சாவ்பாவ் ஆகிய நாளிதழ்களுக்கு டிசம்பர் 28ஆம் தேதி அளித்த நேர்காணலில் அவர் அவ்வாறு கூறினார்.

அண்மை ஆண்டுகளில் வீடுகளுக்கான தேவை அதிகரித்த நிலையில், கழகம் பிடிஓ வீடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் 63,000க்கு மேற்பட்ட பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. 2021ஆம் ஆண்டு 17,100 வீடுகளும் 2022ல் 23,200 வீடுகளும் 2023ல் 22,800 பிடிஓ வீடுகளும் விற்பனைக்கு விடப்பட்டன.

இந்த ஆண்டு அறிவிக்கப்படும் 19,600 வீடுகளையும் சேர்த்தால், 2021 முதல் 2025ஆம் ஆண்டுக்குள் 100,000 பிடிஓ வீடுகள் என்ற இலக்கை எட்டுவதற்கான சரியான பாதையில் செல்வதாகக் கருதப்படும் என்று வீவக கூறியது.

2024ல் விற்பனைக்கு விடப்படும் பிடிஓ வீடுகளில் ஏறத்தாழ 14 விழுக்காட்டு வீடுகளுக்கு, அதாவது 2,800க்கு மேற்பட்ட வீடுகளுக்குக் காத்திருப்பு நேரம் மூன்று ஆண்டுகளுக்குக் குறைவாக இருக்கும்.

2023ல் இத்தகைய வீடுகளின் எண்ணிக்கை 732 மட்டுமே. ஒப்புநோக்க இந்த ஆண்டு விற்பனைக்கு வரும் இத்தகைய வீடுகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்கு.

முன்னதாக, 2025ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 2,000 முதல் 3,000 வரையிலான, குறைவான காத்திருப்பு நேரம் கொண்ட வீடுகளை விற்பனைக்கு விட கழகம் இலக்கு கொண்டிருந்தது. அதை ஓராண்டு முன்பாகவே எட்டிவிட்டதாகக் கூறப்பட்டது.

வீட்டு உரிமை தொடர்பிலான சிங்கப்பூரர்களின் கனவுகளுக்கு மேம்பட்ட ஆதரவு தரும் வகையில், 2024ஆம் ஆண்டு விற்பனைக்குத் திட்டமிடப்பட்டிருக்கும் புதிய வீடுகளில் 75 விழுக்காட்டிற்கு, நான்கு ஆண்டுகள் அல்லது அதற்குக் குறைவான காத்திருப்பு நேரம் என்ற இலக்கை வீவக வகுத்துள்ளது.

கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முந்தைய காலகட்டத்தில் பிடிஓ வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தரத்தையோ பாதுகாப்பையோ விட்டுத்தராமல் அதேநேரம் குறைவான காத்திருப்பு நேரம் உள்ள வீடுகளைக் கட்டித் தருவது தொடர்பில் பணியாற்றி வருவதாகக் கழகம் கூறியது.

எடுத்துக்காட்டாக, கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்கக்கூடிய இடங்களுக்கு முன்னுரிமை தருதல், பெரிய பிடிஓ திட்டங்களைச் சிறு, சிறு திட்டங்களாகப் பகுத்தல் போன்றவை கழகம் பரிசீலிக்கும் நடைமுறைகளில் சில.

கழகம் காலப்போக்கில் அதன் கட்டுமானத் திட்ட நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவரும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது.

இதன் மூலம் ஒரு கட்டத்தில் குறைவான காத்திருப்பு நேரம் கொண்ட பிடிஓ வீடுகளே அதிக எண்ணிக்கையில் இருப்பது உறுதிசெய்யப்படும். சிங்கப்பூரர்களுக்கு, குறிப்பாக முதல்முறை வீடு வாங்குவோருக்கு உதவுவது இதன் நோக்கம்.

தற்போது, வீடு வாங்க விரும்புவோர், பிடிஓ திட்டம், எஞ்சியுள்ள வீட்டு விற்பனைத் திட்டம் (எஸ்பிஎஃப்), பொது விற்பனை எனப் பல்வேறு முறைகளின்கீழ் வீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். 2024 முதல், ஆண்டுக்கு மூன்று முறை பிடிஓ திட்டத்தின்கீழும், ஒருமுறை எஸ்பிஎஃப் திட்டத்தின்கீழும் வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று கழகம் குறிப்பிட்டது.

ஆண்டுக்கு மூன்று பிடிஓ திட்ட விற்பனை மட்டுமே என்பதால், ஒவ்வொரு முறையும் அதிகமான வீடுகளை எதிர்பார்க்கலாம். அதனால் வீடு வாங்க விரும்புவோரின் விண்ணப்பம் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதைக் கழகம் சுட்டியது.

அக்டோபர் 2024 முதல், ‘ஸ்டாண்டர்ட்’, ‘பிளஸ்’, ‘பிரைம்’ என மூன்று பிரிவுகளில் வீடுகள் விற்பனைக்கு விடப்படும். இந்த ஆண்டு பிப்ரவரியில் பிடிஓ திட்டத்துடன் சேர்த்து எஸ்பிஎஃப் திட்டத்தின்கீழும் வீடுகள் விற்பனைக்கு விடப்படும் என்று கழகம் தெரிவித்தது.

கட்டுப்படியான விலையில் வீடுகளைக் கட்டித் தருவதில் கடப்பாடு கொண்டிருப்பதாகக் கூறிய வீவக, இதற்கான வரவேற்பைத் தொடர்ந்து கண்காணித்து, விற்பனை நடைமுறையைச் சீரமைக்க உறுதி தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!