ஆகச் செல்வாக்குமிக்க சிங்கப்பூர் கடப்பிதழ்

சிங்கப்பூர் கடப்பிதழ் ஆகச் செல்வாக்குமிக்க கடப்பிதழ் என்ற நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இம்முறை, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, ஸ்பெயின் என மேலும் ஐந்து நாடுகளுடன் முதல் நிலையைச் சிங்கப்பூர் பகிர்ந்துகொண்டுள்ளது.

ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்பட்ட ஹென்லி கடப்பிதழ் குறியீட்டுப் பட்டியல் இதனைத் தெரிவிக்கிறது.

இந்த ஆறு நாடுகளின் கடப்பிதழ்களைப் பயன்படுத்தி விசா இல்லாமல் 194 இடங்களுக்குப் பயணம் செய்யலாம்.

சென்ற ஆண்டு நிலவரப்படி, சிங்கப்பூர் கடப்பிதழைக் கொண்டு 192 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடிந்தது.

கடந்த ஆண்டில் ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாடுகள் இரண்டாமிடத்தையும் ஜப்பான், பிரான்ஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்திருந்தன.

அண்மைய பட்டியலில் மலேசியா 12வது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. மலேசியர்கள் 182 நாடுகளுக்கு விசாவின்றிப் பயணம் செய்யலாம்.

இந்தோனீசியர்கள் 78 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.

ஹென்லி கடப்பிதழ் குறியீட்டில் இந்தியா 80வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியக் கடப்பிதழ் வைத்திருப்போர் 62 இடங்களுக்கு விசாவின்றிச் சென்று வரலாம்.

2019ஆம் ஆண்டிலிருந்தே ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் நீடிக்கிறது. அந்நாட்டு மக்கள் 28 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் சென்றுவர இயலும் என்ற நிலையில், அது 104ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

அனைத்துலகப் விமான போக்குவரத்து சங்கத்தின் பிரத்தியேகத் தரவுகளின் அடிப்படையில் ஹென்லி கடப்பிதழ் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!