சட்டவிரோத பணப் பரிவர்த்தனை: சந்தேக நபர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள்

சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய ஆகப் பெரிய வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 10 பேரில் சு வென்கியாங் என்பவரும் ஒருவர்.

இவருக்கு எதிராக இரண்டு நாட்களுக்கு முன் ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து புதன்கிழமை (ஜனவரி 31) அன்று மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் சு மீது சுமத்தப்பட்டுள்ளன.

புதிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, சு, ஃபுளுர் பிசினஸ் சர்விஸ் என்ற நிறுவனத்தில் விற்பனை இயக்குநராக பணிபுரிய மனிதவள அமைச்சுக்கு வொர்க் பாஸ் (வேலை அனுமதி அட்டை) விண்ணப்பம் செய்தது தொடர்பானது. ஃபுளுர் பிசினஸ் சர்விஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எண்ணம் இல்லாத நிலையில் அதில் தான் வேலை பார்க்க எண்ணியுள்ளதாக அனுமதி கோரும் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளார் சு.

சு மீதான இரண்டாவது குற்றச்சாட்டில், அவரது மனைவி சு யான்பிங் சார்பாக வொர்க் பாஸ் விண்ணப்பம் செய்வது தொடர்பாக வென் வென் என்பவரை ஈடுபடுத்தி அவர் மூலம் பொய்யான உறுதிமொழி தயாரித்ததாக கூறப்படுகிறது.

அத்துடன், சு வென்கியாங்கின் உத்தரவின் பேரில் அவரது மனைவி சு யான்பிங்குக்கு ஜு யு குடும்ப அலுவலகம் என்ற நிறுவனத்தில் இயக்குநராக பணிபுரிய உள்ளார் என்று எம்பிளாய்மண்ட் பாஸுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது. சு வென்கியாங் தமது மனைவி சு யான்பிங்கை ஜு யு குடும்ப அலுவலகத்தில் இயக்குநராக பணியில் அமர்த்த எவ்விதத் திட்டமும் இல்லாத நிலையில் அவருக்கு எம்பிளாய்மண்ட் பாஸ் விண்ணப்பம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கிறது.

இதில் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையப் பதிவுகளின்படி, ஃபுளுர் பிசினஸ் சர்விஸ் மற்றும் ஜு யு குடும்ப அலுவலக நிறுவனம் ஆகியவை 2021ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என்றும் அவை நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசனை வழங்கும் சேவை புரிவதாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஃபுளுர் பிசினஸ் சர்விஸ் நிறுவனத்தின் வர்த்தக தகவல் திரட்டில் திரு வென்னின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் அவரது மனைவி சு யான்பிங்கின் பெயர் ஜு யு குடும்ப அலுவலக நிறுவனத்தில் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் இயக்குநராக உள்ளார் என்று பதிவாகி உள்ளது.

சு வென்கியாங்கின் மீது உள்ள குற்றச்சாட்டுகளில் எட்டு ஊழல், போதைப்பொருள் கடத்தல், மற்ற கடும் குற்றங்கள் சட்டத்தின்கீழ் வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!