எஃப்ஏ கிண்ணக் காலிறுதிச்  சுற்றுக்கு பேலஸ், உல்வ்ஸ் தகுதி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்களான கிரிஸ்டல் பேலசும் உல்வர்ஹேம்டன் வான்டரர்சும் எஃப்ஏ கிண்ணக் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற் றுள்ளன.
மூன்றாம் நிலை லீக்கில் இடம்பெற்றுள்ள டோன்காஸ்டர் ரோவர்ஸ் குழுவை 2-0 எனும் கோல் கணக்கில் பேலஸ் நேற்று வென்றது. இப்போட்டியில் இன் னும் உள்ள ஆகக் கீழ்நிலை குழுவானது டோகான்ஸ்டர். இந்த ஆட்டத்தில் அக்குழு அதிக நேரம் பந்தைத் தனது சொந்த கட்டுப் பாட்டிற்குள் வைத்திருந்தாலும் இறுதியில் பேலசுக்கே வெற்றி வாய்ப்பு கிட்டியது.
இரண்டாம் நிலை லீக் குழுவான பிரிஸ்டல் சிட்டியை 1-0 எனும் கோல் கணக்கில் உல்வ்ஸ் வென்றது.
பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு எஃப்ஏ கிண்ணக் காலிறுதிச் சுற்றுக்கு உல்வ்ஸ் தகுதி பெற்றுள்ளது.
மற்றோர் ஆட்டத்தில் இரண்டாம் நிலை லீக் குழுக்களான சுவான்சியும் பிரண்ட்ஃபர்ட்டும் மோதின.
இதில் சுவான்சி 4-1 எனும் கோல் கணக்கில் வென்றது.
ஏற்கெனவே, பிரிமியர் லீக் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மான்செஸ்டர் சிட்டி, எஃப்ஏ கிண்ணக் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. பிரைட்டன், வாட்ஃபர்ட் ஆகிய குழுக்களும் மேன்சிட்டியுடன் இணைந்துள்ளன.
இந்நிலையில், கடந்த பருவத்தின் எஃப்ஏ கிண்ண வெற்றியாளரான செல்சி, சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற எஃப்ஏ கிண்ண ஐந்தாம் சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவுடன் பொருதியது. கடந்த பருவத்தில் எஃப்ஏ கிண்ண இறுதிச் சுற்றில் இந்த இரு குழுக் களும் மோதியது குறிப்பிடத்தக்கது.
கிரிஸ்டல் பேலசுக்கும் டோன்காஸ்டர் ரோவர்சுக்கும் இடையே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டோன்காஸ்டரின் அல்ஃபி மே கோலடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!