72 ஆண்டுகால சாதனையைத் தகர்த்த இலங்கையின் பிரபாத்

காலே: இலங்கை கிரிக்­கெட் அணி­யின் சுழற்­பந்து வீச்­சா­ள­ரான பிர­பாத் ஜெய­சூர்யா குறைந்த போட்­டி­களில் 50 விக்­கெட்டு­களை வீழ்த்தி 72 ஆண்டு கால சாத­னையை முறி­ய­டித்­துள்­ளார்.

இடது கை சுழற்­பந்து வீச்­சா­ள­ரான பிர­பாத் ஜெய­சூர்யா இந்த மைல்­கல் சாத­னையை காலே­வில் நடை­பெற்று வந்த அயர்­லாந்து அணிக்கு எதி­ரான 2வது டெஸ்ட் போட்­டி­யின் கடைசி நாளான நேற்று முன்­தி­னம் நிகழ்த்­தி­னார்.

அப்­போது, ஆசிய கண்­டத்­தில் அதி­வே­க­மாக 50 விக்­கெட்­டு­களைக் கைப்­பற்­றிய வீர­ரா­க­வும் அவர் உள்­ளார்.

31 வய­தான பிர­பாத் ஜெய­சூர்யா தனது 7வது டெஸ்ட் போட்­டி­யில், அயர்­லாந்து பந்­த­டிப்­பா­ளர் பால் ஸ்டெர்­லிங்கை ஆட்­ட­மி­ழக்­கச் செய்­த­போது இந்த சாத­னை­களைப் படைத்­தார்.

இங்­கி­லாந்து வேகப்­பந்து வீச்­சா­ளர் டாம் ரிச்­சர்ட்­சன், தென் ஆப்­பி­ரிக்­கா­வின் வெர்னன் பிலாண்­டர் ஆகி­யோ­ரு­டன் பிர­பாத் ஜெய­சூர்யா 2வது இடத்தைப் பகிர்ந்­து­கொண்­டுள்­ளார்.

இதற்கு முன்­னர் கடந்த 1951ஆம் ஆண்டு வெஸ்ட் இண்­டீஸ் அணி­யின் ஆல்ஃப் வாலண்­டைன் எட்டுப் போட்­டி­களில் 50 விக்­கெட்­டுகளைச் சாய்த்­தி­ருந்­ததே சாத­னை­யாக இருந்­தது.

ஒட்­டு­மொத்­த­மாக, டெஸ்ட் அரங்­கில் குறைந்த போட்­டி­களில் 50 விக்­கெட்டு­களைப் கைப்­பற்றி­ ய­வர்­க­ளின் பட்­டி­ய­லில் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சார்ல்ஸ் டர்­னர் முத­லி­டத்­தில் உள்­ளார். அவர், 1888ஆம் ஆண்டு ஆறு டெஸ்ட் போட்­டி­களில் விளை­யாடி இந்த சாத­னையை நிகழ்த்தி இருந்­தார்.

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை வென்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!