இரண்டாம் பாதியில் தூங்கிய ஆர்சனல்

லண்டன்: பிரிமியர் லீக் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற ஆர்சன லின் கனவு ஞாயிற்றுக்கிழமை தகர்ந்தது.

வில்லனாக உருவெடுத்த பிரைட்டன் அண்ட் ஹோப் அல்பியனிடம் 3-0 என்னும் கோல் எண்ணிக்கையில் ஆர்சனல் வீழ்ந்தது.

முன்னதாக நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் எவர்ட்டனை மான்செஸ்டர் சிட்டி வென்று நான்கு புள்ளிகள் முன்னேறியது. அதனால் இன்னும் ஓர் ஆட்டத்தில் வென்றால் போதுமானது என்று ஆர்சனல் மிதப்பில் இருந்தது.

பிரைட்டனுடன் ஆட்டம் தொடங்கியதும் அந்த மிதப்பு தொடர்ந்தது. எளிதில் கோல் போட்டுவிடலாம் என்ற நினைப்பு ஈடேறவில்லை. முதல் பாதி முழு வதும் வெறும் போராட்டத்திலேயே முடிந்தது. எந்தத் தரப்பும் கோல் போடவில்லை.

இரண்டாம் பாதி தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் பிரைட்ட னின் ஜூலியோ என்சிஸோ போட்டியின் முதல் கோலைப் போட்டார்.

ஆட்­டத்­தின் விறு­வி­றுப்பு அப்­போ­து­தான் தொடங்­கி­யது. இரண்­டா­வது கோலை போடும் பிரைட்­ட­னின் முயற்­சி­களை ஆர்­ச­னல் வீரர்­கள் தடுக்க பெரு முயற்­சி­களை எடுத்­த­னர்.

இருப்­பி­னும், பிரைட்­டன் அணி­யி­ன­ரின் வேகம் குறை­ய­வில்லை. 85வது நிமி­டத்­தில் டெனிஸ் உண்­டவ் அந்த அணி­யின் இரண்­டா­வது கோலைப் புகுத்­தி­னார். ஆர்­ச­னல் வீரர்­க­ளின் உற்­சா­கம் குறை­யத் தொடங்­கி­யது.

போட்டி முடிய மூன்று நிமி­டங்­கள் இருந்த வேளை­யில் பிரைட்­ட­னின் மூன்­றா­வது கோல். இம்­முறை கோல் அடித்­த­வர் பெர்­விஸ் எஸ்­து­பி­னான்.

81 புள்­ளி­க­ளு­டன் சிட்­டி­யை விட 4 புள்­ளி­கள் பின்­தங்­கிய ஆர்­ச­ன­லுக்கு இன்­னும் இரண்டு போட்­டி­களே எஞ்சியுள்­ளன. நாட்­டிங்­ஹாம் ஃபாரெஸ்­டு­டன் சனிக்­கி­ழமை ஆர்­ச­னல் மோதும் ஆட்­டம் சிட்­டி­யின் அடுத்த நகர்­வுக்கு முக்­கி­ய­மா­னது. 58 புள்­ளி­க­ளைப் பெற்­றி­ருக்­கும் பிரைட்­டன்­வ­சம் இன்­னும் 4 ஆட்­டங்­கள் உள்­ளன.

ஆர்­ச­ன­லின் சொந்த மண்­ணில் போட்டி நடை­பெற்­ற­தால் அதன் ரசி­கர்­கள் ஏரா­ள­மா­கத் திரண்­டி­ருந்­த­னர். ஆயி­னும் பிரைட்­டன் 2வது கோலைப் புகுத்­தி­ய­துமே அவர்­கள் கொஞ்­சம் கொஞ்­ச­மாக வெளி­யே­றத் தொடங்­கி­னர். மூன்­றா­வது கோல் விழுந்­த­போது திடல் காலி­யா­னது.

தோல்­வியை எதிர்­பார்க்­காத ஆர்­ச­னல் நிர்­வாகி மைக்­கல் ஆர்­டெட்டா, “இரண்­டாம் பாதி­யில் எனது வீரர்­கள் ஆடிய விதம் ஏற்­கத்­தக்­க­தாக இல்லை. தோல்­விக்கு மன்­னிப்பு கேட்­டுக்­கொள்­கி­றேன்,” என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!