வரலாறு படைக்கத் துடிக்கும் சிட்டி

மான்­செஸ்­டர்: ஒரு­கா­லத்­தில் இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக்­கி­லேயே சரி­யாக விளையாட முடி­யா­மல் தடு­மா­றி­வந்த மான்­செஸ்­டர் சிட்டி இன்று ஐரோப்­பா­வின் ஆகப் பெரிய காற்­பந்து குழுக்­களில் ஒன்­றாக வளர்ந்­துள்­ளது. வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக ஐரோப்­பிய சாம்­பி­யன்ஸ் லீக் கிண்­ணத்தை வெல்­லும் இலக்­கு­டன் உள்­ளது அக்­குழு.

இப்­ப­ரு­வத்­தின் சாம்­பி­யன்ஸ் லீக் அரை­யி­று­திச் சுற்­றின் இரண்­டாம் ஆட்­டத்­தில் நடப்பு வெற்­றி­யா­ள­ரான ஸ்பெ­யி­னின் ரியால் மட்­ரிட்டை இன்று சந்­திக்­கிறது சிட்டி.

அரை­யி­று­திச் சுற்­றின் முதல் ஆட்­டம் 1-1 எனும் கோல் கணக்­கில் சம­நி­லை­யில் முடிந்­தது. சுற்­றின் இரு ஆட்­டங்­க­ளி­லும் பதி­வா­கும் மொத்த கோல் எண்­ணிக்­கை­யைக் கொண்டு வெற்­றி­பெ­றும் குழு எது என்­பது முடி­வெ­டுக்­கப்­படும்.

ரியாலை வெல்­வது சாதா­ர­ண­மன்று. எனி­னும், ரியா­லின் சொந்த மண்­ணில் அத­னு­டன் சம­நிலை கண்­டது சிட்­டிக்கு ஊக்கு­விப்­பாக அமை­ய­லாம். அதோடு, இந்­தப் பரு­வம் ஸ்பா­னிய லீக்­கில் ரியால் அவ்­வ­ளவு சிறப்­பாக விளை­யா­ட­வில்லை.

நிர்­வாகி பெப் கார்­டி­யோ­லா­வின் தலை­மை­யில் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு முதல்­முறை­யாக சாம்­பி­யன்ஸ் லீக் இறு­தி­யாட்­டத்­துக்கு முன்­னே­றி­யது சிட்டி. ஆனால் இறு­தி­யாட்­டத்­தில் செல்­சி­யி­டம் தோல்­வி­ய­டைந்­தது.

கடை­சி­யாக 2011ஆம் ஆண்­டில் ரியா­லின் பரம வைரி­யான பார்­சி­லோ­னாவை சாம்­பி­யன்ஸ் லீக் கிண்­ணத்தை வெல்ல வைத்­தார் கார்­டி­யாலோ.

அதற்­குப் பிறகு ஜெர்­ம­னி­யின் பயர்ன் மியூ­னிக், இங்­கி­லாந்­தின் சிட்டி இரண்­டுக்­கும் அவர் அக்­கிண்­ணத்தை வென்று தர­வில்லை.

இம்­முறை நட்­சத்­தி­ரத் தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர் எர்­லிங் ஹாலண்ட் இருப்­பது சிட்­டிக்­குச் சாத்­தி­ய­மாக அமை­ய­லாம். பொது­வாக பல குழுக்­கள் சிர­மப்­படும் பரு­வத்­தின் இறு­திக் கட்­டத்­தில் சிட்டி அபா­ர­மாக ஆடி வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!