சீறும் ஸ்பர்ஸ், தவிக்கும் செல்சி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் பரம வைரிகளான டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரும் ஆர்சனலும் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டுள்ளன.

26வது நிமிடத்தில் கிறிஸ்டியன் ரொமேரோ சொந்த வலைக்குள் பந்தை அனுப்பியதால் முன்னுக்குச் சென்றது ஆர்சனல். 42வது நிமிடத்தில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பரின் குழுத் தலைவரான சோன் ஹியோங் மின் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

பின்னர் 54வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை கோலாக்கி மீண்டும் ஆர்சனலை முன்னுக்கு அனுப்பினார் புக்காயோ சாக்கா. ஒரு நிமிடம் கழித்து மீண்டும் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் சோன் ஹியோங் மின்.

இந்த லீக் பருவத்தில் இவ்விரு குழுக்களும் இதுவரை மிகச் சிறப்பாக விளையாடி வந்துள்ளன. இரண்டும் விட்டுக்கொடுப்பதாகத் தெரியவில்லை.

மற்றொரு லீக் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா, செல்சியை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது. இந்தப் பருவம் இதுவரை ஓர் ஆட்டத்தை மட்டுமே வென்றிருக்கும் செல்சிக்குப் பிரச்சினைகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.

இன்னொரு லீக் ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது லிவர்பூல். இப்பருவத்தை நன்றாகத் தொடங்கிய வெஸ்ட் ஹேம் மீண்டும் தடுமாறத் தொடங்கிவிட்டது.

பொர்ன்மத்தை 3-1 எனும் கோல் கணக்கில் வென்றது பிரைட்டன். ஆட்டத்தில் முதலில் பின்னுக்குச் சென்ற பிரைட்டன், லீக்கில் தனது அசுர வேட்டையைத் தொடரும் வண்ணம் மீண்டுவந்து வெற்றிகண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!