உள்ளரங்க கிரிக்கெட்டில் இரட்டை வெற்றி

‘டர்ஃப் சிட்டி’யில் இம்மாதம் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த உள்ளரங்க கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டங்களில் ‘ஸ்ட்ரைக்கர்ஸ்’ அணிகள், இரு பிரிவுகளிலும் வெற்றியைச் சுவைத்தன.

விறுவிறுப்பாக இருந்த ஆட்டங்களில் இரு அணிகளும் மூன்று ஓட்ட வித்தியாசத்தில் வென்றன.

சிங்கப்பூர் உள்ளரங்க கிரிக்கெட் சங்கம் மூன்றாம் முறையாக நடத்திய இப்போட்டிகள் இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் சென்ற வாரம் வரை வார இறுதி நாள்களில் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் ஆறு அணிகள் பங்கேற்றன.

பிரிவு ஒன்றில், ‘ஸ்ட்ரைக்கர்ஸ் ப்லிட்ஸ்’ அணி தொடர் சுழல்முறை ஆட்டங்களிலிருந்து முன்னணி வகித்து, இறுதிச் சுற்றிலும் வெற்றிபெற்றது. இரண்டாம் இடத்தில் ‘பிச்சர்ஸ்’, மூன்றாம் இடத்தில் ‘கமின்8’, நான்காவதாக ‘ஷரிஃப்8’ அணிகள் வந்தன.

பிரிவு இரண்டில், முதன்முறையாக விளையாடிய ‘ஸ்ட்ரைக்கர்ஸ் ஏசஸ்’ அணி அரையிறுதிச் சுற்று, இறுதிச் சுற்றுகளில் பின்தங்கியிருந்தும், பின்னர் வியக்கத்தக்க வகையில் எழுச்சியுடன் ஆடி வெற்றியைத் தன்வசப்படுத்தியது.

அதுவரையிலும் தோற்றிராத ‘ஐபிசி ராயல்ஸ்’ குழு இறுதிச் சுற்றில் தோற்று ஏமாற்றமடைந்தது. மூன்றாம் நிலையில் ‘ராயல் ஸ்டேக்ஸ்’, நான்காம் இடத்தில் ‘ஐசிஐசிஐ’ அணிகள் முடித்தன.

‘ஸ்ட்ரைக்கர்ஸ் ப்லிட்ஸ்’ அணியின் ஹரிஹரன், 32, “உள்ளரங்கக் கிரிக்கெட்டின் சிறப்பு, அனைத்து விளையாட்டாளர்களும் அனைத்து நேரங்களிலும் முழு ஈடுபாட்டுடன் இருக்கவேண்டும். களக்காப்பு மிகவும் முக்கியம். கடைசிப் பந்துவரை ஆட்டம் திசைதிரும்பலாம்,” என்றார்.

இவர் தேசிய உள்ளரங்க கிரிக்கெட் அணியிலும் ஆல்ரவுண்டராக விளையாடுகிறார்.

உள்ளரங்க கிரிக்கெட்டில் ஒவ்வோர் அணியிலும் எட்டு விளையாட்டாளர்கள்; இன்னிங்சுக்கு 16 ஓவர். ஒருவர் ஆட்டமிழந்தால் 5 ஓட்டங்கள் கழிக்கப்படும். ஆனால், பந்தடிப்பாளர்கள் இருவரும் தொடர்ந்து 4 ஓவர் முடியும்வரை ஆடவேண்டும். ஒவ்வொரு விளையாட்டாளரும் இரண்டு ஓவர் கட்டாயமாகப் பந்து வீசவேண்டும்.

ஓராண்டில் இருமுறை இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!