டி20 போட்டிகளில் ஆக அதிக முறை வெற்றி; பாகிஸ்தானை விஞ்சியது இந்தியா

புதுடெல்லி: டி20 அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் இந்தியா முத்திரை பதித்துள்ளது.

இவ்வகை போட்டியில் ஆக அதிக முறை வெற்றிகளைப் பதிவுசெய்துள்ள அணியாக இந்தியா திகழ்கிறது.

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற டி20 தொடரின் நான்காவது ஆட்டத்தில் வென்றதன்மூலம் இந்தியா இச்சாதனையை நிகழ்த்தியது.

அந்த ஆட்டத்தில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 3-1 எனும் கணக்கில் வென்றது மட்டுமன்றி, டி20 அனைத்துலகப் போட்டிகளில் தனது 136வது வெற்றியையும் பதிவுசெய்தது.

2006ல் டி20 வகைப் போட்டியில் அறிமுகம் கண்ட இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 213 ஆட்டங்களில் 136ல் வெற்றி பெற்றுள்ளது. 67 ஆட்டங்களில் தோல்வியும் ஓர் ஆட்டத்தில் சமநிலையும் அவ்வணி கண்டுள்ளது.

ஒப்புநோக்க, பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள 226 டி20 போட்டிகளில் 135ல் வெற்றி கண்டுள்ளது.

அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் நியூசிலாந்து (200 ஆட்டங்களில் 102ல் வெற்றி), ஆஸ்திரேலியா (181 ஆட்டங்களில் 95ல் வெற்றி), தென்னாப்பிரிக்கா (171 ஆட்டங்களில் 95ல் வெற்றி) ஆகியவை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!