தாய்லாந்துக்கு இணைய விளையாட்டில் முதல் பதக்கம்

ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இணைய விளையாட்டுகளில் முதல் பதக்கத்தைக் கைப்பற்றிய நாடு எனும் பெருமையைப் பெற்றது தாய்லாந்து.

ஒலிம்பிக் அதிகாரிகளால் அணுக்கமாகக் கவனிக்கப்பட்ட கைப்பேசி விளையாட்டு ஒன்றில், வியட்னாமை வீழ்த்தி தாய்லாந்து வெண்கலப் பதக்கம் வென்றது.

முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இணைய விளையாட்டுகளின் முன்னோட்டம் பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இம்முறை அவை முதன்முறையாக பதக்க விளையாட்டாக ஹாங்ஜோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

குழு, தனிநபர் என இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் ஏழு தங்கப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

சீனாவின் பெருந்தொழில்நுட்ப நிறுவனமான ‘டென்சென்ட்’ உருவாக்கிய ‘அரினா ஆஃப் வேலர்’ எனும் இணைய விளையாட்டின் ‘பிளே ஆஃப்’ சுற்றில் ஐவர் அடங்கிய தாய்லாந்துக் குழு 2-0 என்ற புள்ளிக் கணக்கில் வியட்னாம் குழுவை வீழ்த்தியது.

செவ்வாய்க்கிழமை மாலை நடக்கவிருந்த தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் மலேசியாவும் சீனாவும் பொருதவிருந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!