அரசுப் பள்ளியில் படித்து அசத்திய இஸ்ரோ விஞ்ஞானி

சென்னை: சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலை ஒட்டுமொத்த நாடும் கூடுதல் பெருமிதத்துடனும் கொண்டாடி வருகிறது.

இந்தச் சூழலில் அவர் சில மாதங்களுக்கு முன்னர் பேசிய காணொலி ஒன்று தற்போது வருகிறது.

தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார்.

“சந்திரயான்3 திட்ட இயக்குநர் திரு வீர முத்துவேல், விழுப்புரம் அரசு பள்ளியில் படித்தவர். அவரால் சாதிக்க முடியும் என்றால் உங்களாலும் சாதிக்கலாம் என்கிறார்,” என்ற அறிமுகக் குறிப்புடன் அவர் அந்தக் காணொலியைப் பகிர்ந்துள்ளார்.

காணொளியில் “தமக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த மயில்சாமி அண்ணாதுரைக்கு நன்றி. நான் பிறந்தது விழுப்புரத்தில். பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியில் தான் படித்தேன். பள்ளியில் படித்தவரை நான் ஒரு சராசரி மாணவன். அடுத்து என்ன படிக்க வேண்டும், எங்கே படிக்க வேண்டும் என்று எந்த ஒரு திட்டமும் எனக்கிருந்ததில்லை” என்றார் வீர முத்துவேல்.

“பெற்றோர், குடும்பம் தரப்பில் யாருக்கும் கல்வியில் பெரிய பின்புலம் இல்லை. நண்பர்களோடு சேர்ந்து படித்தேன். படிக்கும்போது பொறியாளராக வேண்டும் என்ற விருப்பம் வந்தது.”

“கல்லூரியில் சேர்ந்தேன். எல்லாத் தேர்வுகளிலும் முதல் அல்லது இரண்டாவது இடத்தில் வருவேன். அதேவேளையில் எல்லா நேரத்திலும் படித்துக்கொண்டே இருக்க மாட்டேன். படிக்கும்போது கவனத்துடன் நன்றாகப் புரிந்து படிப்பேன். அதுவே எனக்கு நல்ல மதிப்பெண்ணைப் பெற்றுத் தந்தது. அதன் விளைவாக முதுநிலை படிப்பில் சேர்ந்தேன்,” என்கிறார் வீர முத்துவேல் குறிப்பிட்டார்.

“இளநிலை போல் முதுநிலைப் படிப்பிலும் நன்றாகப் படித்தேன். அதன் பின் பொறியாளராக வேலையில் சேர்தேன். விண்வெளி ஆராய்ச்சி மீது எனக்கு அதிக ஈடுபாடு உண்டானது. அப்போதுதான் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இன்ஸ்டிட்யூட் பெங்களூருவில் ஹெலிகாப்டர் பிரிவில் பணிபுரியும் வாய்ப்புக் கிடைத்தது.”

“அதனைத் தொடர்ந்து எனது கணவு மையமான இஸ்ரோவில் பணி புரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முதலில் திட்ட பொறியாளர், பின்னர் திட்ட மேலாளர், மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் உள்பட பல முக்கிய திட்டங்களில் பணியாற்றினேன்.” என்று வீர முத்துவேல் கூறினார்.

“வேலை செய்துகொண்டே சென்னை ஐஐடியில் முனைவருக்கான ஆராய்ச்சிப் படிப்பில் இணைந்தேன். அதில் நவீன ஆராய்ச்சியை மேற்கொண்டேன். எனது ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக அளவில் புகழ்பெற்ற இதழ்களில் பிரசுரமாகின. பல அறிவியல் அரங்குகளில் ஆராய்ச்சி கட்டுரையைப் படித்துக்காட்டி வெற்றிகரமாக முனைவர் பட்டம் பெற்றேன்” என்றார் அவர்.

துணை நிர்வாக மேலாளராக இருந்தேன். சந்திரயான்-3 திட்டத்தில் எனக்கு திட்ட இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டது என்று நினைவுகூர்ந்தார் அவர்.

நான் ஓர் எளிமையான நபர். என்னால் இவ்வளவு தூரம் வர முடியும் என்றால் எல்லோராலும் முடியும். வாய்ப்புகள் எல்லோருக்கும் இருக்கின்றன. அதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பது நம் கைகளில் தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சுய ஒழுக்கம், எதிர்பார்ப்புகளற்ற ஈடுபாடு, கடின உழைப்பு. நமக்கு இருக்கும் தனித்துவம் ஆகியன நிச்சயமாக வெற்றி தரும். கடின உழைப்பு பலனில்லாமல் போகவேபோகாது என்று நம்பிக்கையுடன் தனது காணொளி பதிவை முடித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!