You are here

இளையர் முரசு

சவால்மிக்க துறையில் சாதிக்கும் இளையர்கள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிக்கல்களும் சவால்களும் நிறைந்த உணவு பானத் துறையில் ஈடுபட பல இளையர்கள் தயங்கும் வேளையில், இத்துறையில் ஆர்வத்துடன் இறங்கியுள் ளனர் சகோதர்கள் 28 வயது மகேந்திரன் சண்முகம், 26 வயது விக்னேஸ்வரன் சண்முகம். இருபத்தோரு ஆண்டு நிறைவை அடைந்துள்ள ‘காயத்ரி’ உணவகத் தில் சிறு வயது முதல் வேலை செய்திருந்தபோதிலும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப உணவகத்தை நடத்துவது சுலபம் அல்ல என்றார் சுவிட்சர்லாந்தின் ‘ஏக்கோல் லே ரோஷ்’ பல்கலைக்கழகத்தின் ஹோட்டல் நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றிருக்கும் மகேந்திரன்.

சிங்கப்பூர் அனைத்துலகத் திரைப்பட விழாவில் ‘ஏஞ்சல்’, ‘தையல்’

படம்: சிங்கப்பூர் அனைத்துலகத் திரைப்பட விழா

நெருக்கமாக இருந்த பாட்டியின் இறுதிச் சடங்குகளை செய்ய விரும்புகிறார் ஆனந்த். பாட்டியின் இறுதி ஆசையை நிறைவேற்ற போராடும் ஆனந்தை மைய மாகக்கொண்டது ‘ஏஞ்சல்’ குறும்படம். உணர்ச்சிகளைத் தூண்டி பார்ப்பவர் மனதை எளிதில் நெகிழவைக்கும் இந்தக் குறும்படத்தை இயக்கியுள்ளார் 34 வயது டோன் அரவிந்த். 2005ஆம் ஆண்டு வாழ்க் கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை குறும்படமாக அவர் எடுத்துள்ளார். மறக்கமுடியாத அந்தச் சம்பவத்தைக் குறும்படமாக எடுக்க வேண்டும் என்று விரும்பிய டோன், “உணர் வுபூர்வமாக தயாராக இல் லாததால் இதுவரை இந்த முயற்சியில் நான் இறங்க வில்லை,” என்றார்.

காற்பந்தாட்டத்தில் இளையர்கள்

படம்: ஜெஸ்பர்

முஹம்மது ஃபைரோஸ்

‘ஃபுட்சால்’ எனப்படும் காற்பந்தாட்டத்தைப் பற்றி பலரும் அறிந்திருந்தாலும் உள்ளரங்கு காற்பந்துத் திடலில் நடைபெறும் இந்த விளையாட்டு குறித்து முழுமையாக அறிந்திருப்பவர்கள் சிலர்தான். அந்த விளையாட்டு முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வதில் பல முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார் 36 வயது ஜெஸ்பர் ரிச்சர்ட் தோமஸ். காற்பந்து விளையாட்டு மீது அலாதி பிரியம் கொண்டிருக்கும் இவருக்கு, சிறு வயது முதலே ‘ஸ்த்ரீட்’ காற்பந்து விளையாட்டில் ஈடுபட்டுள்ள அனுபவம் உண்டு. இவர் விளையாடியுள்ள பல்வேறு ஃபுட்சால் அணிகளில் ஒன்று ‘டோர்செட் பாய்ஸ்’.

பெற்றோரால் திருந்திய பெண்ணின் கதை

படம்: எஸ்.ஐ.டி.எஃப்.இ

வில்சன் சைலஸ்

இளையர்களின் விருப்பங்களைப் புரிந்துகொள்ளாத பெற்றோருக்கும் பிடித்தமானவற்றை செய்ய முடி யாத இளையருக்கும் இடையிலான உறவுச் சிக்கலை அலசுகிறது ‘கொலுசு’ குறும்படம். டிசம்பர் 2ஆம் தேதி எஸ்பிளனேட் கலை அரங்கில் திரையிடப்படவுள்ள இப்படம் பதின்மவயது பெண்ணான ரஞ்சனியின் பார்வையில் சொல்லப் படுகிறது. சிறு வயதிலிருந்து பெற்றோரால் அடக்கப்படும் ரஞ்ச னிக்குள் வளர்ந்துவரும் விரக்தி, ஒரு கட்டத்தில் அவளை எவ்வாறு வன்முறைக்குத் தூண்டுகிறது என்பது படத்தின் உச்சக்கட்டம்.

மின்விளக்கில் இயங்கும் செயலி

மின்விளக்கில் இயங்கும் செயலி

வெளிச்சத்தை அளிக்கும் மின்விளக்குகளை வித்தியாசமாகப் பயன்படுத்துவது பற்றி ஃபிலிப்ஸ் மின்னணு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த போட்டியில் மூன்று தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். கல்லூரி விடுதியில் தங்கியுள்ள ஏறக்குறைய 1,000 மாணவர்கள் இரவு 10.30 மணிக்கு ஒரே நேரத்தில் விடுதியில் தங்கள் இருப்பைப் பதிவு செய்யும்போது ஏற்படும் நெருக் கடியைத் தவிர்க்க ‘மைன்ஸ்பேஸ்’ செயலி பற்றிய யோசனையை முன் வைத்தனர்.

சாதனை இளையர்களுக்குத் தங்க விருது

ராகவ் பரத்வாஜ் (நடுவில்)

கடந்த வெள்ளிக்கிழமையன்று தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கிழக்குக் கல்லூரியில் நடைபெற்ற 17வது தேசிய இளையர் சாதனை தங்க விருது நிகழ்ச்சியில் மொத்தம் 180 இளையர்களுக்குத் தங்க விருதுகள் வழங்கப்பட்டன. 1992ஆம் ஆண்டில் தொடங்கிய தேசிய இளையர் சாதனை விருது, கடந்த 25 ஆண்டுகளாக சாதனை படைக்கும் இளையர்களை அடை யாளம் கண்டு வருகிறது. அதிபர் ஹலிமா யாக்கோப், தேசிய இளையர் சாதனை விருது களின் ஆலோசனைக் குழுத் தலைவரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இளையர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

இருளில் ஒளிரும் மருதாணி

சுவேதா சரவணகுமார், 22,

சுதாஸகி ராமன்

இருட்டான அறையில் கைகளை அலங்கரிக்கும் அழகிய மயில், தாமரை வடிவங்களைக் கொண்ட மருதாணி வடிவமைப்பு பல வண் ணங்களில் மிளிர்கிறது. இந்த புதிய வகை ஒளிரும் மருதாணியை (glow in the dark) ‘வான ஹென்னா (Wanna Henna)’ இவ்வாண்டு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இவ்வாண்டு தீபாவளிக்கு இந்தப் புதிய ஒளிரும் மருதாணி யுடன் கருநீல நிற ஜாகுவா மருதாணியையும் பயன்படுத்தி பெண்களின் கைகளை ‘வான ஹென்னா’வின் நிறுவனர் சுவேதா சரவணகுமார், 22, அலங்கரித்து வருகிறார்.

அர்த்தமுள்ள தீபாவளித் திருநாள்

தீபாவளிக்கு இன்னும் ஒருநாள் மட் டுமே உள்ள நிலையில் பண்டிகைக்கு இந்துக்கள் முழுமூச்சுடன் தயாராகி வருகின்றனர். இவ்வேளையில், தங்களுக்கு தீபாவளி தரும் அர்த்தங்கள் குறித்து இளையர்கள் சிலர் தங் களது கருத்துகளைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த தம்மைப் போன்ற இளையர்களுக்குத் தீபாவளி என்றாலே மட்டற்ற மகிழ்ச்சி என்ற சுதர்‌ஷினி நந்தகுமார், 18, தீபாவளி என்றாலே முதலில் நினை வுக்கு வருவது சிராங்கூன் சாலையின் சிறப்பான அலங்காரங்கள்தான் என்று சொன்னார்.

இசையின் வழி எடுத்தியம்பும் ‘பாக்ஸ்சைல்ட்’

படம்: பாக்ஸ்சைல்ட்

பிலிப்பீன்ஸ், ஸ்பானிய, இந்திய மரபுடைமைகளைச் சேர்ந்தவராக இருந்தாலும் தந்தையின் வழி வந்த தமது தமிழ் அடையாளத்தை வலுப்படுத்த ஆர்வத்துடன் இருக்கிறார் ஜீவன் குலரெத்தினம், 25. ‘அறம்’ என்ற கருப்பொருளைக் கொண்ட இவ்வாண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் சிங்கப்பூர், இந்திய எழுத்தாளர்களின் தமிழ் கவிதைகளுக்கு இசையமைத்து அவற்றைப் படைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தபோது உற்சாகத்துடன் அதனை ஏற்றார் ஜீவன். விழாவில் மகாகவி பாரதி யாரின் ‘ஒளிபடைத்த கண்ணி னாய்’, உள்ளூர் கவிஞர் க.து.மு.

Pages