You are here

உல‌க‌ம்

சீண்டாதே: வடகொரியாவிடம் டிரம்ப்

அமெரிக்காவைக் குறைத்து மதிப்பிடவோ சீண்டிப் பார்க்கவோ வேண்டாம் என்று வடகொரியாவுக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆசியப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று சீனாவுக்குப் புறப்படுமுன் தென்கொரிய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். “பொல்லாத பாதையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் உங்களுக்கு இன்னல் ஏற்படுவதை அதி கரிக்கும்,” என்று வடகொரியத் தலை வரைக் குறிபிட்டு திரு டிரம்ப் பேசினார். “வடகொரியா என்பது உங்களது பாட்டனின் கற்பனையில் உருவான சொர்க்கம் அல்ல. யாரும் சொந்தம் கொண்டாட முடியாத நரகம் அது.

காபூல் தொலைக்காட்சி நிலையம் மீது தாக்குதல்

காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள தொலைக்காட்சி நிலையம் மீது துப்பாக்கிக்காரர்கள் தாக்கியதில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தொலைக்காட்சி நிலையத்திற் குள் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கியால் சுட்டும் கை யெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். துப்பாக்கிக்காரர்கள் இன்னும் அக்கட்டடத்திற்குள் இருப்பதாக அங்கிருந்து தப்பிவந்த செய்தி யாளர் ஒருவர் கூறினார். துப்பாக்கிக்காரர்கள் நுழைந்த போது அக்கட்டடத்தினுள் 100க் கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

டெக்சஸ் துப்பாக்கிச்சூடு: விதிமுறையை பின்பற்றத் தவறிய விமானப் படை

வா‌ஷிங்டன்: டெக்சஸ் மாநிலத் தில் உள்ள ஒரு தேவாலயத்தில் 26 பேரை சுட்டுக்கொன்ற டெவின் பாட்ரிக் கெல்லி பற்றிய கடந்த கால குற்றப் பின்னணி பற்றிய தகவல்களை தேசிய குற்றவியல் தகவல் நிலையத்தில் பதிவு செய்ய அமெரிக்க விமானப் படை தவறியது குறித்து புலன் விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானப் படை முன்னாள் ஊழியரான டெவின் கெல்லி 2012ஆம் ஆண்டு அவனது மனைவி மற்றும் குழந்தையை அடித்து துன்புறுத்தியதற்காக நீதிமன்றம் அவனுக்கு தண் டனை விதித்தது.

சிட்னி: பள்ளி வகுப்பறைக்குள் கார் புகுந்ததில் 2 சிறுவர்கள் பலி

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் வகுப் பறைக்குள் திடீரென்று ஒரு கார் புகுந்ததில் 8 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்ததாக போலிசார் கூறினர். பேங்க்சியா பள்ளியில் நடந்த அந்த சம்பவத்தில் மேலும் மூன்று மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அந்தச் சம்பவத்தின்போது வகுப்பறையில் இருந்த மற்ற 19 மாணவர்களின் உடல்நிலையை மருத்துவ உதவியாளர்கள் பரி சோதனை செய்ததாக அதிகாரி கள் கூறினர். அந்தக் காரின் ஓட்டுநரான 52 வயது மாது போலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அதிபர் டிரம்ப்: பேச்சு நடத்த வடகொரியா முன்வர வேண்டும்

சோல்: வடகொரியா பேச்சு நடத்த முன்வர வேண்டும் என்றும் அதன் அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடுவது குறித்து பேச்சு நடத்த வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று தென்கொரியா வந்துசேர்ந்த திரு டிரம்ப், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் சோல் நகரில் செய்தி யாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டபோது இவ்வாறு கூறினார். திரு டிரம்ப் இதற்கு முன்னதாக வடகொரியாவுக்கு எதிராக கடுமையான சொற்களால் மிரட்டல் விடுத்து வந்தார்.

பினாங்கு வெள்ள நிவாரணத்திற்காக US$1 பில்லியனில் 16 அரசு திட்டங்கள்

ஜார்ஜ் டவுன்: பினாங்கு மாநிலத்தை முடக்கியுள்ள பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மலேசிய சுற்றுச்சூழல், இயற்கை வளத் துறை அமைச்சு 4.3 பில்லியன் ரிங்கிட்டை (US$1.01 பில்லியன்) 16 வெள்ள நிவாரணத் திட்டங்களுக்காகச் செலவிட இருப்பதாக நேற்று அத்துறை அமைச்சரான வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபார் தெரிவித்தார். இம்மாதம் முதல் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நாடளாவிய நிலையில் 16 வெள்ள நிவாரணத் திட்டங்களுக்குச் இந்தத் தொகை செலவிடப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். வடிகால்களும் அணைக்கட்டுகளும் இந்தத் திட்டங்களில் அடங்கும் எனவும் கூறப்பட்டது. “படிப்படியாக வெள்ளப் பிரச்சினையை இதன்வழி தீர்க்க முடியும்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சவூதி இளவரசர் மன்சூர் மாக்ரோன்

ரியாத்: ஏமன் நாட்டு எல்லை அருகே ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அந்த ஹெலிகாப்டரில் சென்ற சவூதி அரேபிய இளவரசர் மன்சூர் பின் மாக்ரோன் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது. ஆசிர் மாநில துணை ஆளுநரான மன்சூர் மின் மாக்ரோன் ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் சிலருடன் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று அந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் கூறுகின்றன. ஹெலிகாப்டரில் எத்தனை பேர் சென்றனர் என்பது தெரியவில்லை.

சவூதி இளவரசர்கள் மீது லஞ்ச, ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள்

ரியாத்: சவூதி அரேபியாவில் அதிரடியாக கைது செய்யப் பட்ட 11 இளவரசர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது லஞ்ச, ஊழல் குற்றச் சாட்டு களும் பண மோசடி மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் சுமத்தப் பட்டுள்ளதாக சவூதி உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் அமைக்கப்பட்ட ஊழலுக்கு எதிரான புதிய குழு சனிக்கிழமை சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்களையும் நான்கு அமைச்சர்களையும் 12க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்களையும் கைது செய்தது. கைது ஆணை மற்றும் பயணத் தடைகளை விதிக்க இக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

டெக்சஸ்: துப்பாக்கிக்காரனை துரத்திச் சென்ற இருவருக்கு பாராட்டு

சான் அன்டோனியோ: அமெரிக் காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள பாப்டிஸ்ட் தேவாலயத்தில் ஒரு துப்பாக்கிக்காரன் கண்மூடித் தனமாக சுட்டதில் குறைந்தது 26 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் அந்த துப்பாக்கிக்காரனை துரத்திச் சென்ற உள்ளூர்வாசிகள் இரு வரை மக்கள் பாராட்டி வருகின் றனர். அந்த துப்பாக்கிக்காரன் அவனது காரில் தப்பிச்சென்ற போது தானும் மற்றொருவரும் சேர்ந்து அவனை துரத்திச் சென்ற தாக ஜோனி லான்ஜென்டோரப் என்பவர் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வியட்னாமில் புயலும் மழையும்: 27 பேர் மரணம்

ஹனோய்: வியட்னாமின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் பலத்த புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென்கடல் பகுதியில் உருவான தாம்ரே புயல் வலுவடைந்து மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசத் தொடங்கியது. இதுவரை 19 பேர் புயலுக்குப் பலியானதாகவும் 22 பேரைக் காணவில்லை என்றும் பேரிடர் தடுப்புக் குழு தெரிவித்துள்ளது. புயலில் சுமார் 626 வீடுகள் முற்றாக இடிந்து விழுந்ததாகவும் பாதுகாப்பு கருதி 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அக் குழு தெரிவித்துள்ளது.

Pages