சிங்க‌ப்பூர்

உயர்மட்ட வெளிநாட்டுப் பிரமுகர்கள் உட்பட சிங்கப்பூரில் நடைபெறும் பெரிய அளவிலான அனைத்துலக நிகழ்ச்சிகளில் தற்காப்பு அமைச்சு, இணைய பாதுகாப்புக்கு முனைப்புடன் செயல்படுகிறது என்று தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அதிகரித்த வெளிநாட்டினர் வேலைவாய்ப்பில் பெரும்பகுதி பொதுவாக சிங்கப்பூரர்கள் செய்ய விரும்பாத வேலைகள் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) நாடாளுமன்றத்தில் கூறினார்.
புவிசார் அரசியல் மோதல்கள் போன்ற உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய அல்லது உணர்ச்சிபூர்வமான தலைப்புகள் நற்குணமும் குடியியல் கல்வியும் (சிசிஇ) பாடங்களில் சேர்க்கப்படலாம் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் ஏப்ரல் 2 அன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
சிங்கப்பூர் நாணய ஆணையம் (மாஸ்), மின்னிலக்கக் கட்டண வில்லை (Digital Payment Token) சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
உள்ளூர் சிம் அட்டைகளைத் தவறான முறையில், சட்டவிரோத செயல்களுக்காகப் பயன்படுத்துவோருக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.