இந்தியா

புதுடெல்லி: உலகளாவிய, புவிசார் அரசியல் தொடர்பில் அவசரமான சவால்களைக் கையாளுவதில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான அவசியம் குறித்து இந்திய-அமெரிக்க வெளியுறவு, தற்காப்பு அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோழிக்கோடு: கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் கேரள மாநிலக் காங்கிரஸ் கட்சி நவம்பர் 23ஆம் தேதி பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஒற்றுமைப் பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.சுதாகரன் அறிவித்துள்ளார். இந்தப் பேரணியை அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தொடங்கி வைக்கிறார்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 3ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது.
புதுடெல்லி: மியன்மாரை சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் பங்ளாதேஷ் நாட்டவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி, எல்லைப்புற மற்றும் தொலைதூர மாநிலங்களில் போலி அடையாள ஆவணங்களுடன் வசிப்பது அதிகரித்து வருகிறது.
ஒட்டாவா: உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனக் கூறி, நவம்பர் 19ஆம் தேதிக்குப் பிறகு சீக்கியர்களை ஏர் இந்தியா விமானங்களில் பறக்க வேண்டாம் எனக் காணொளி ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கனடியக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.